மகளையும் மூன்று பேரப்பிள்ளைகளையும் விஷம் வைத்து கொன்ற பெண்மணி: சொன்ன திகைக்க வைக்கும் காரணம்
ரஷ்யாவில் ஊனமுற்ற மகளையும் மூன்று பேரப்பிள்ளைகளையும் நூடுல்ஸ் உணவில் விஷம் வைத்து கொன்ற பெண்மணிக்கு 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கவனித்துக்கொள்ள இனி தம்மால் முடியாது
ரஷ்யாவின் Aleksandrovka கிராமத்தை சேர்ந்த Lidia Shiryaeva என்பவரே தமது ஊனமுற்ற 23 வயது மகள் மற்றும் மகனின் மூன்று பிள்ளைகளை விஷம் வைத்து கொன்றவர்.
Credit: Newsflash
இந்த நால்வரையும் கவனித்துக்கொள்ள இனி தம்மால் முடியாது ஏன்ற நிலையில் தான் தாம் கொலை செய்ய முடிவெடுத்ததாக அவர் விளக்கமளித்துள்ளார். 2021 டிசம்பர் மாதத்தில் அவரது கணவர் வாகன விபத்தில் சிக்கி தலையில் பட்ட காயம் காரணமாக மரணமடைந்த நிலையில் இந்த நான்கு கொலையும் அவர் திடடமிட்டுள்ளார் என்றே கூறப்படுகிறது.
இவரது 23 வயது மகள் மூளை பாதிப்பு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார். பேரப்பிள்ளைகள் மூவருக்கும் 3, 5, 7 வயது தான். ஆனால் அந்த பிள்ளைகளின் தாயார் மொத்தமாக தமது பிள்ளைகளை கவனிப்பதை விட்டுவிட்டார்.
பிள்ளைகளின் தந்தையும் வேலை நிமித்தம் எப்போதும் ஊருக்கு வெளியே தங்கியிருப்பார். மட்டுமின்றி ஒரே வீட்டில் கணவர், ஊனமுற்ற சகோதரர், அவளது மகன் மற்றும் கொல்லப்படட நால்வரும் என ஒன்றாகவே குடியிருந்து வந்துள்ளனர்.
கணவரின் இறப்புக்கு பின்னரே அவர் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதாகவும் அதுவே அவரை கொலை செய்ய தூண்டியிருக்கலாம் என உள்ளூர் பத்திரிகைகள் கூறுகின்றன.
நூடுல்ஸ் உணவை சமைத்து
அனால் மருத்துவ சோதனையில் அவர் உளவியல் பாதிப்பு ஏதுமின்றி தெளிவாக காணப்பட்டதாக உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் அவரது மகன் அதை ஏற்க மறுத்துள்ளார்.
Credit: Newsflash
கடந்த ஆண்டு கோடை காலத்தில் தான் Shiryaeva தமது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். அனைவரின் கவனத்தையும் திசை திருப்பிவிட்டு தாம் நூடுல்ஸ் உணவு வாங்க சென்றதாகவும், அத்துடன் விஷமும் வாங்கி வந்ததை குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் நூடுல்ஸ் உணவை சமைத்து பேரப்பிள்ளைகளுக்கும் மகளுக்கும் அளித்ததாக தெரிவித்துள்ளார். சேகரிக்கப்படட ஆதாரங்கள் மற்றும் அவரது ஒப்புதல் வாக்குமூலம் என அனைத்தும் அவர் குற்றவாளி என்பதை உறுதி செய்வதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் விஷம் கலந்த உணவை சாப்பிட்ட நால்வரும் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டு சில நாட்களுக்கு பின்னரே மரணமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த 50 வயது பெண்மணிக்கு 19 ஆண்டுகள் சிறை தணடனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.