தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க... புலம்பெயர் மக்களுக்கு சாதகமான முடிவெடுக்கும் ஐரோப்பிய நாடு
தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்கும் நடவடிக்கையாக, புலம்பெயர்ந்தோருக்கு சாதகமான பிரேரணை ஒன்றின் மீது கிரேக்க நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.
தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க
தொடர்புடைய பிரேரணை ஊடாக புலம்பெயர் மக்களுக்கு மூன்று ஆண்டு வதிவிட மற்றும் பணி அனுமதி பெற வாய்ப்பளிக்கப்படும். கடன் நெருக்கடியில் இருந்து மீண்டு வரும் பொருளாதாரத்தின் முக்கிய துறைகளில் தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்கவே கிரேக்க நாடு இந்த முடிவுக்கு வந்துள்ளது.
@afp
மத்திய கிழக்கு, ஆசியா மற்றும் கிழக்கு ஐரோப்பாவிலிருந்து ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்திற்கான நுழைவாயிலாக கிரீஸ் உள்ளது.
இதில் பெரும்பாலானோர் கட்டுமானம், விவசாயம் மற்றும் சுற்றுலா போன்ற துறைகளில் சட்டத்திற்குபுறம்பாக வேலை செய்து வருகின்றனர். 2018ல் சர்வதேச நாடுகளால் மூன்று முறை நிதியுதவி அளித்த பின்னரும், பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் கிரேக்கத்தில் முதன்மையான துறைகளில் தொழிலாளர் பற்றாக்குறை நீடித்து வருகிறது.
மேலும், கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னர் வெளியேறிய ஊழியர்கள் பலர் பின்னர் திரும்பவே இல்லை. ஜூன் மாதம் மீண்டும் தெரிவு செய்யப்பட்ட கன்சர்வேட்டிவ் அரசாங்கம் புலம்பெயர் மக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் கிரேக்கத்தின் கொள்கையை கடுமையாக்கியுள்ளது.
சட்டவிரோத குடியேறிகள் 300,000 பேர்
இருப்பினும், ஆவணங்கள் ஏதுமற்ற சட்டவிரோத குடியேறிகள் சுமார் 300,000 பேர்கள் கிரேக்கத்தில் தற்போது வசிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கிரேக்க மக்களால் பணியாற்ற மறுக்கும் துறைகளில் தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க இந்த பிரேரணை உதவியாக இருக்கும் என்று அமைச்சர் Akis Skertsos தெரிவித்துள்ளார்.
@pa
தொடர்புடைய பிரேரணை ஊடாக புலம்பெயர்ந்தோர் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாட்டில் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளாக வசித்து வருபவர்கள், குற்றப்பின்னணி இல்லாதவர்கள் மற்றும் வேலை வாய்ப்பு பெற்றவர்கள், புதிய வதிவிட அனுமதிப்பத்திரத்திற்கு டிசம்பர் 2024க்குள் விண்ணப்பிக்கலாம்.
ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை உறுப்பினர்கள் இருப்பதால், தொடர்புடைய பிரேரணை நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறும் என்றே கூறப்படுகிறது. இதனூடாக அல்பேனியா, ஜார்ஜியா, பாகிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் சுமார் 30,000 பேர்கள் இந்த புதிய திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |