கிரேக்கத்தில் 57 பேரை பலிகொண்ட ரயில் விபத்து: வெளியான சிசிடிவி காட்சி
கிரேக்கத்தில் 57 பேரைக் கொன்ற ரயில் விபத்து பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
இணையத்தில் வெளியான இந்த காட்சிகள், சரக்கு ரயில் பயணிகள் ரயிலின் மீது மோதிய துல்லியமான தருணத்தைக் காட்டுகிறது.
57 பேர் பலியான கோரமான ரயில் விபத்து
கிரேக்கத்தில் (Greece) செவ்வாய்கிழமை ஏற்பட்ட பயங்கரமான ரயில் விபத்தில் இதுவரை 57 பேர் உயிரிழந்ததாக அக்கணக்கிடப்பட்டுள்ளனர். மேலும், 80-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
Reuters
செவ்வாய்கிழமை நள்ளிரவு 11.21 மணிக்கு பயணிகள் ரயிலும் சரக்கு ரயிலுகம் நேருக்கு நேர் மோதிய இந்த கோரா விபத்து நடந்தது. இது "துயரகரமான மனித தவறு" என்று கிரேக்க பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் (Kyriakos Mitsotakis) தெரிவித்துள்ளார்.
விபத்து ஏற்பட்ட இரண்டாவது நாளில் வெளியான விபத்தின் சிசிடிவி காட்சிகள், சரக்கு ரயில் பயணிகள் ரயிலின் மீது மோதிய துல்லியமான தருணத்தைக் காட்டுகிறது.
ReutersAPR (LNN): Greece Train Crash
— AnonHeel (@AnonHeel) March 1, 2023
CCTV Footage of two trains had a head on collision in Greece. pic.twitter.com/tpdI8MkdxC
உள்ளூர் ஸ்டேஷன் மாஸ்டரின் அலட்சியம் தான் விபத்துக்கு காரணம் என்பது அதிகாரப்பூரவமாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, 59 வயதான ஸ்டேஷன் மாஸ்டர் காவலில் வைக்கப்பட்டார். அதே நேரத்தில் கிரேக்க அரசாங்கம் ரயில் நெட்வொர்க்குகளின் செயல்பாட்டில் தவறுகளை ஒப்புக்கொண்டது.
கிரீஸ் நாட்டின் போக்குவரத்து அமைச்சர் கோஸ்டாஸ் கரமன்லிஸ் (Kostas Karamanlis), இந்த நிகழ்வின் மீது மக்கள் கொந்தளிப்பின் விளைவாக பதவி விலகியுள்ளார். அவ்ருக்கு பதிலாக இப்போது கோஸ் ஜெராபெட்ரிடிஸ் (Giorgos Gerapetritis) நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் நேற்று, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வருத்தம் தெரிவித்ததுடன், "அரசியல் அமைப்பு மற்றும் மாநிலத்தின் முழு பரிசோதனையை" நடத்துவதாக உறுதியளித்தார்.
அவர்களிடம் நேரிடையாக உரையாற்றிய அவர், “விசாரணை நடத்தப்பட்டு அனைத்தும் கிரேக்க குடிமக்களுக்கு தெரியவரும் என்று நான் கூற விரும்புகிறேன்" என்று கூறினார்.
மோதலுக்குப் பிறகு, ரயிலின் டைனிங் கார் தீப்பிடித்து எரிந்தது, உள்ளே வெப்பநிலை 1,300 டிகிரி செல்சியஸை எட்டியது என்று தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது.
அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிக்கப்பட்ட பல நபர்களின் எலும்புகளிலிருந்து பாதிக்கப்பட்டவர்களின் அடையாளம் கண்டறியப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Getty Images
AP