கிரீஸ் ரயில் விபத்து: 26லிருந்து 57ஆக உயர்ந்த பலியானவர்கள் எண்ணிக்கை
கிரீஸில் செவ்வாய்க்கிழமை அரங்கேறிய பயங்கரமான ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளது.
ரயில் விபத்து
கிரீஸ் நாட்டின் ஏதென்ஸுக்கு வடக்கே 235 மைல் தொலைவில் உள்ள டெம்பே என்ற பகுதியில் செவ்வாய்க்கிழமை இரண்டு ரயில்கள் ஒன்றுக்கு ஒன்று நேராக மோதிக் கொண்டன.
சுமார் 350 பேருடன் பயணித்த பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதியதில் முதல் இரண்டு பெட்டிகள் முற்றிலுமாக சிதைந்தன, மேலும் இந்த மோதலின் பின்விளைவாக தடம்புரண்ட ரயில்களின் முன்புற பெட்டிகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
AP
இதையடுத்து கோர விபத்தில் சிக்கிய பொது மக்களை மீட்பதற்காக தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் களமிறக்கப்பட்ட தோடு, இராணுவத்தினரும் உதவிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்கான காரணம் இதுவரை எதுவும் வெளியாகாத நிலையில், 30 மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
உயிரிழப்பு 57-ஆக அதிகரிப்பு
ரயில் விபத்தில் மேற்கொள்ளப்பட்ட முதல் கட்ட மீட்பு பணியில் 26 பேர் வரை கொல்லப்பட்டு இருப்பதுடன், 85க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
Getty
இந்நிலையில் கிரீஸ் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளது.
விபத்து குறித்து விசாரணையில் ஈடுபட்டு வரும் அதிகாரிகளில் ஒருவரான Eleni Zaggelidou வழங்கிய தகவலில், சிதைந்த 57 உடல்களில் இருந்தும் DNA எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
REUTERS