வேலை வாய்ப்புகள் இல்லாத வளர்ச்சி வீணானது: முன்னாள் RBI ஆளுநர் கருத்து
வேலை வாய்ப்பை உருவாக்காத வளர்ச்சி வீணானது என ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரங்கராஜன் தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்தியா மூன்றாவது பாரிய பொருளாதார நாடாக மாறப் போகிறது என்ற செய்தியின் பின்னணியில், அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது வேலைவாய்ப்பை உருவாக்குவது என்பது உலக நாடுகளுக்கு சவாலாக மாறியுள்ளதால், இதனை அடைய கடுமையாக உழைக்க வேண்டும் என இக்பாய் அறக்கட்டளையின் 14வது பட்டமளிப்பு நிகழ்ச்சியில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தார்.
பணவீக்கம், ரூபாய்-டாலர் விகிதம் போன்ற பிரச்னைகளால் இந்தியா போராடி வருவதாகவும், வளர்ச்சி விகிதம் 6-7 சதவீதமாக இருந்தால், தனிநபர் வருமானம் 13,000 டொலர் என்ற நிலையை எளிதில் எட்டும் என்றும் அவர் கூறினார்.
மறுபுறம், ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் போருடன், பெரும்பாலான நாடுகள் முக்கிய பொருட்களின் இறக்குமதியை மறுபரிசீலனை செய்து தங்கள் சொந்த விநியோக முறையை மேம்படுத்துகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Former RBI Governor, job creation without growth is bad, Growth Without Jobs Is Waste, Ex Rbi Governor Rangarajan