குவாதலூப் பற்றி அறிய வேண்டிய தகவல்களும், தமிழர்களின் வாழ்க்கையும்
குவாதலூப் பற்றிய முக்கியமான தகவல்களையும், அதன் வரலாற்றை பற்றியும் நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
குவாதலூப் (Guadeloupe)
குவாதலூப் (Guadeloupe) என்பது கரிபியன் பகுதியில் அண்டிலிசுவின் ஒரு பகுதியான லீவர்டு தீவுகளில் அமைந்துள்ள பிரான்சிய மண்டலத் தீவுக்குழு ஆகும்.
இந்த தீவின் மொத்த பரப்பளவு 1,628 சதுரகிமீ ஆகும். இதன் மக்கள்தொகை 2024 ஜனவரி நிலவரப்படி 396,399 ஆகும். வட அமெரிக்காவில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய பகுதிகளில் மக்கள்தொகை அதிகம் இருக்கக்கூடிய பகுதி இதுவாகும்.
குவாதலூப்பின் இரண்டு முக்கிய தீவுகள் பாசு-தெர் மற்றும் கிராண்ட்-டெர் ஆகும். இந்த இரண்டு தீவுகளும் குறுகிய நீரிணையால் பிரிக்கப்படுகின்றன. இந்த தீவுகளுக்கு இடையேயான போக்குவரத்து பாலங்கள் வழியாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு தீவுகளை தவிர மரீ-கலான்ட், லா ரேசிடாரே, சான்டெசு ஆகிய சிறிய தீவுகளும் உள்ளன.
பிரான்சின் மற்ற வெளிநாட்டு மண்டலங்களைப் போல குவாதலூப்பும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு தொகுதியாகும்.
மொழிகள்
குவாதலூப்பின் அதிகாரபூர்வமான மொழி யூரா ஆகும். ஐரோப்பிய ஒன்றியத்தின் எந்தவொரு குடிமகனும் இங்கு வந்து நிரந்தரமாக குடியேற முடியும். இதன் தலைநகர் பாசு-தெர் தீவில் தீவில் உள்ள பாசு-தெர் ஆகும்.
மேலும், அதிகாரப்பூர்வ மொழியான பிரெஞ்சு, அந்தீலிய கிரியோல் மொழிகளை இங்கு பேசுகின்றனர்.
தமிழர்கள்
பிரான்சிற்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் கரும்பு தோட்டங்களில் வேலை செய்வதற்காக குவாடலூப்பிற்கு தமிழர்கள் அழைத்து வரப்பட்டனர்.
குறிப்பாக பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இருக்கும் கூலி விவசாயிகளை அழைத்துச் சென்றனர்.
1861 -ம் ஆண்டு இந்தியாவில் இருந்து குவாடலூப்பிற்கு 40,000 ஒப்பந்த தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டனர். இவர்களில் சிலர் தற்போது கரும்பு தோட்டங்களுக்கு சொந்தக்காரர்களாகவும் மாறியுள்ளனர்.
1883 -ம் ஆண்டிற்கு பிறகு பிரிட்டிஷ் அரசு தொழிலாளர்களை சேர்க்கும் கொள்கைக்கு எதிரான முடிவை எடுத்ததாலும், அதிக இந்தியர்கள் எண்ணிக்கையாலும் இந்திய தொழிலாளர்கள் வருவதை நிறுத்தியது.
இவர்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடினமான வாழ்க்கை முறையால் இறந்தனர். இதையடுத்து, 1923 ம் ஆண்டில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குவாடலூபியர்களுக்கு குடியுரிமையும் வாக்களிக்கும் உரிமையும் வழங்கப்பட்டது.
இங்குள்ள இந்தியர்களில் சிலர் தமிழ் அல்லது பிற இந்திய மொழிகளைப் பேசுகிறார்கள். அதோடு, இந்திய பெயர்களை ஏற்றுக் கொள்வதன் மூலம் இந்தியாவுடன் உள்ள உறவை பேணுகின்றனர். இன்னும் சிலர் பிரெஞ்சு மற்றும் கிறிஸ்தவ பெயர்களையும் ஏற்றுக்கொள்கின்றனர்.
குறிப்பாக இந்தியர்கள் அண்மை காலங்களில் தீவுக்கு இடம்பெயர்ந்து பரிசுக் கடைகள் போன்ற வணிகங்களை நிறுவியுள்ளனர். அதுமட்டுமல்லாமல், இந்திய கலாச்சாரத்தை மேம்படுத்த பல சங்கங்களும் உள்ளன.
குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இந்து கோவில்களும் உள்ளது. இங்குள்ள தமிழர்கள் தங்களுடைய கலாச்சாரத்தை பாதுகாப்பதற்காக சொந்த மொழியையும் படிக்க தொடங்கியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |