தமிழர்கள் மகிழ்ச்சியாக வாழும் ரீயூனியன் தீவு நாடு .., அறியப்படாத உண்மைகள் உள்ளே
தமிழர்கள் அதிகம் வாழும் தீவு நாடான ரீயூனியனை (Réunion) பற்றிய வரலாறு மற்றும் சில முக்கிய தகவல்களை இங்கே பார்க்கலாம்.
ரீயூனியன் தீவு நாடு
இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு பிரெஞ்சுத் தீவு நாடு தான் ரீயூனியன் (Réunion). இது, மொரிசியசிலிருந்து 200 கிமீ தென்மேற்கிலும், மடகாசுகருக்குக் கிழக்கேவும் அமைந்துள்ளது.
இதன் தலைநகரம் சென்-தெனி ஆகும். இந்த நாட்டின் மக்கட்தொகை 2024 நிலவரப்படி 879,500 ஆகும். குறிப்பாக இந்த நாட்டில் குறிப்பிடத்தக்க தமிழர் வம்சாவழிகள் வாழ்கின்றார்கள்.
பிரான்ஸ் நாட்டின் வெளிநாட்டு நிர்வாக பகுதியாக ரீயூனியன் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வரலாறு: 16 -ம் நூற்றாண்டு கால கட்டத்தில் ரீயூனியன் நாடு அறியப்படவில்லை.
1507 -ம் ஆண்டில் போர்த்துக்கீச நாடுகளின் வருகைக்கு பிறகே இந்த நாடு அறியப்பட்டது. முதன்முதலாக இந்த நாட்டை பெதுரோ மஸ்கரானசு என்பவர் கண்டறிந்தார்.
இதையடுத்து, போர்த்துக்கீசர் சான்டா அப்பலோனியா தீவுகளை விட்டு வெளியேறிய பின்னர் பிரான்ஸியர் கைப்பற்றினர்.
பின்னர், 1642 -ம் ஆண்டில் ஜாக் புரீனிசு என்பவர் இந்த தீவு நாட்டை பிரான்சுக்காக கோரி மடகாசுகரில் இருந்து பிரெஞ்சுக் கிளர்ச்சியாளர்களை அங்கு கொண்டு சென்றார்.
இவர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் பிரான்ஸ் நாட்டிற்கு திரும்பினர். பிரான்சில் போர்போன் ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர் தான் இந்த நாட்டிற்கு ரீயூனியன் என்று பெயர் வைத்தனர்.
இதன்பின்னர் நடந்த போர் புரட்சியில் இந்த தீவின் பெயர் மாற்றப்பட்டு இறுதியாக 1848 -ம் ஆண்டில் மீண்டும் ரீயூனியன் எனப் பெயரிடப்பட்டது.
ஒப்பந்த தொழிலாளர்கள்
இந்த நாட்டிற்கு 17 முதல் 19ம் நூற்றாண்டுகள் வரை இந்தியர்கள், ஆப்பிரிக்கர், சீனர், மலாய் ஆகியோர் பிரெஞ்சு மக்களுடன் குடியேற தொடங்கினர்.
1960 -ம் ஆண்டு முதல் ஐரோப்பாவுக்கு வெளியேயிருந்து குடியேறியவர்கள் அடிமைகள் தான். இந்த அடிமை தொழில்1848 ஆம் ஆண்டு டிசம்பர் 20 -ல் நிறுத்தம் செய்யப்பட்டது.
இதையடுத்து தான் ஒப்பந்தக் தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டனர். இறுதியாக, ரீயூனியன் நாடானது 1946 மார்ச் 19 -ல் பிரான்சின் கடல் கடந்த மண்டலமாக ஆக்கப்பட்டது.
அரசியல் மற்றும் பொருளாதாரம்
பிரெஞ்சு சட்டப்படி ரீயூனியன் நாடு நிர்வகிக்கப்படுகிறது. இங்கிருந்து பிரான்சின் தேசியப் பேரவைக்கு 7 உறுப்பினர்களும், மேலவைக்கு 3 உறுப்பினர்களும் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இந்த நாட்டில் பொருளாதாரத்தை பொறுத்தவரை முக்கிய உற்பத்தி, மற்றும் ஏற்றுமதிப் பொருளாக சர்க்கரை உள்ளது. மேலும், சுற்றுலா துறை மூலமாகவும் வருவாய் ஈட்டப்படுகிறது.
அதோடு, முக்கிய தொழிலாக விவாசாயம் உள்ளது. ரம், கடல் உணவுகள் ஆகியவற்றையும் ஏற்றுமதி செய்கிறார்கள்.
மக்கள்
ரீயூனியன் தீவில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான ஆப்பிரிக்கர், இந்தியர்கள், ஐரோப்பியர்கள், மலகாசி, சீனர் ஆகியோர் வாழ்கின்றனர்.
ங்குள்ள மக்கள் ஐரோப்பியா, ஆப்பிரிக்கா, ஆசிய நாட்டில் இருந்து குடிபெயர்ந்தவர்கள் ஆவார். அவர்கள் இங்குள்ள அனைத்து இன மக்களுடன் பழகி திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
இந்திய வம்சாவளியினரை பொறுத்தவரை தமிழரும், குஜராத்தியரும் பெரும்பான்மையாக இருக்கின்றனர். இதில், குஜராத்தில் இருந்து பெரும்பாலான முஸ்லீம்கள் வந்துள்ளனர்.
இவர்கள் தவிர பீகார் மக்கள் மற்றும் மற்ற இந்திய மாநிலங்களில் உள்ளவர்களும் வாழ்கின்றனர். குறிப்பாக, இந்த தீவில் பிறந்து வளர்ந்தவர்களை கிரியோல்கள் என்று கூறுகின்றனர்.
இந்த நாட்டின் அதிகாரபூர்வ மொழியாக பிரான்சிய மொழி உள்ளது. ஆனால், பெரும்பான்மையானோர் ரீயூனியன் கிரியோல் மொழியை பேசுகின்றனர்.
இங்குள்ள பாட சாலைகளில் ஆங்கில மொழி கட்டாய இரண்டாம் மொழியாகப் பயிற்றுவிக்கப்படுகிறது. அதோடு விருப்ப மொழியாக செருமன், தமிழ், எசுப்பானியம் ஆகிய மொழிகள் உள்ளது.
தமிழர்கள்
தமிழ்ப் பின்புலம் கொண்ட ரீயூனியன் நாட்டு குடிமக்களை ரீயூனியன் தமிழர்கள் என்று சொல்கிறார்கள். மொத்தம் 100000 மேலான குடிமக்கள் தமிழர்கள் என்று கூறப்படுகிறது.
இவர்களில் பெரும்பாலானோர் பிரான்சிய காலனித்துவ ஆட்சியாளர்களால் வரவழைக்கப்பட்டவர்களின் வழித்தோன்றல்கள் ஆவார்கள்.
அதாவது இந்த நாட்டு மக்கட் தொகையில் 20% மக்கள் தமிழர்கள் ஆவார். இந்திய ஒன்றியத்துடன் பாண்டிச்சேரியை இணைந்தவுடன், பிரான்ஸ் அரசு பாண்டிச்சேரி வாழ் மக்களுக்கு பிரான்சு குடியுரிமை வழங்க முன்வந்தது.
இந்த காரணத்தினால் 50 பாண்டிச்சேரித் தமிழ்க் குடும்பங்கள் வாழ்கின்றனர். இங்கு தமிழ் சங்கம் ஒன்றும் உள்ளது. மேலும், அங்குள்ள மக்கள் தங்களுக்கு இந்தியக் குடியுரிமையும், பல்கலைக்கழகமும் வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இங்குள்ள மக்கள் பலரும் தமிழ் கலாச்சாரத்தை கடைபிடித்து வருகிறார்கள். மேலும், இங்கு பல சிவன் மற்றும் முருகன் கோயில்கள் அமைந்துள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் தை பூசம், ஆடி 18, பொங்கல் ஆகிய விழாக்களை விமரிசையாக கொண்டாடுகின்றனர். அதோடு அங்குள்ள கோயில்களில் இன்றும் காவடி எடுத்தும் வருகின்றனர். முக்கியமாக, இங்கு வாழும் தமிழ் மக்கள் பெரும் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர் என்று சொல்லப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |