புடினுடைய கழிவுகளை சேகரித்து பத்திரமாக ரஷ்யாவுக்கு எடுத்துச் செல்லும் பாதுகாவலர்கள்
ரஷ்ய ஜனாதிபதி புடின் அமெரிக்கா சென்று அமெரிக்க ஜனாதிபதியுடன் சந்திப்பு நிகழ்த்திய நிலையில், அவர் கொண்டு சென்ற இரண்டு சூட்கேஸ்களைக் குறித்த ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
இரண்டு சூட்கேஸ்கள்
அவற்றில் ஒன்று, அணு ஏவுகணைகளை ஏவுவதற்கான பொத்தான் இருக்கும் ஒரு சூட்கேஸ்.
அமெரிக்க ஜனாதிபதியிடமும் அப்படி ஒரு சூட்கேஸ் உண்டு. அது Nuclear Football என அழைக்கப்படுகிறது.
மலத்தை ரஷ்யாவுக்கு எடுத்துச் செல்லும் சூட்கேஸ்
புடினைப் பொருத்தவரை, அவரது பாதுகாவலர்கள் இரண்டாவது சூட்கேஸ் ஒன்றை தங்களுடன் கொண்டு செல்கிறார்கள். அதில் அவரது கழிவுகள் வைக்கப்படுமாம்!
அதாவது, புடின் மற்ற நாடுகளுக்குச் செல்லும்போது, அந்த நாட்டிலுள்ளவர்கள் அவரது கழிவுகளை சேகரித்து, அதை ஆய்வுக்குட்படுத்தி, அவருக்கு என்ன உடல் உபாதைகள் உள்ளன என்பதை கண்டுபிடித்துவிடலாம் என்பதாலேயே, அவரது கழிவுகளை சேகரித்து, பத்திரமாக மீண்டும் ரஷ்யாவுக்கே கொண்டு சென்றுவிடுவார்களாம் அவரது பாதுகாவலர்கள்.
இந்த விடயத்தை இரண்டு நாட்டு ஊடகவியலாளர்கள் உறுதி செய்துள்ளார்கள். 2017ஆம் ஆண்டு புடின் பிரான்ஸ் சென்றபோது இப்படி ஒரு விடயம் நடந்ததாக பிரான்ஸ் ஊடகவியலாளர்கள் இருவர் தெரிவித்துள்ளர்கள்.
அதேபோல, புடின் வியன்னா சென்றபோதும் இப்படி ஒரு விடயம் நடந்ததாக தெரிவிக்கும் முன்னாள் பிபிசி ஊடகவியலாளரான Farida Rustamova என்பவர், 1999ஆம் ஆண்டு புடின் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்தே அவர் எந்த நாட்டுக்குச் சென்றாலும் அவரது கழிவுகள் சேகரிக்கப்பட்டு ரஷ்யாவுக்குக் கொண்டு செல்லப்படும் வழக்கம் துவங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |