அதீத வெப்பத்தால் வெளிரிப்போகும் பவளப்பாறைகள்., அபாயத்தின் எச்சரிக்கையா?
பல்லுயிர் பெருக்கம் நிறைந்த மன்னார் வளைகுடா கடல் உயிர்க்கோள காப்பகத்தில் பவளப்பாறைகள் அதன் நிறங்களை இழந்து வெளிரிப்போக ஆரம்பித்ததால் மனிதனுக்கு இயற்கை சொல்லும் அபாய எச்சரிக்கையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
வெளிரிப்போகும் பவளப்பாறைகள் (coral reefs)
இந்த நிலைமையின் தீவிரத்தை மதிப்பிடுவதற்காக நீருக்கடியில் விரைவான ஆய்வுகளை மேற்கொள்ள மாநில வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் மன்னார் வளைகுடாவிற்கு சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டதாக செய்தி வெளியிடப்பட்டது.
அதில், "இயல்புக்கு மேல்" மன்னார் வளைகுடாவின் கடல் மேற்பரப்பு வெப்பநிலையால் (SST) பவளப்பாறைகள் வெளிரிப்போக ஆரம்பித்து மரணத்தைத் தூண்டும் என்று எச்சரிக்கை விடுத்தது.
இந்த பவளப்பாறைகள் வெளுப்பு மே கடைசி வாரம் மற்றும் ஜூன் முதல் வாரத்தில் ஏற்படும் என்று தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் கணித்தது.
ஆனால், ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் இருந்தே பவளப்பாறைகள் வெளிரிப்போக தொடங்கியதால் நிலைமை மேலும் மோசமடைய வாய்ப்புள்ளதை காட்டுகிறது.
மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகத்தின் இயக்குனர் ஜெகதீஷ் எஸ் பாக்கன், "கடந்த வாரம் சில இடங்களில் பவளப்பாறைகள் வெளிரிப்போனதாகவும்" தெரிவித்திருந்தார்.
மேலும், " தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் எச்சரிக்கையை தொடர்ந்து நாங்கள் கண்காணித்து வருகிறோம். தூத்துக்குடியைச் சேர்ந்த சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி நிறுவனம் (SDMRI) மற்றும் சென்னையை தளமாகக் கொண்ட தேசிய நிலையான கடற்கரை மேலாண்மை மையம் (NCSCM) ஆகியவை மாதிரிகளை சேகரித்து ஆய்வு மேற்கொள்வதாகவும்" கூறினார்.
மன்னார் வளைகுடா மற்றும் பால்க் விரிகுடாவின் பவளப் பகுதிகளைச் சுற்றியுள்ள கடல் வெப்பநிலையின் பரவலைப் புரிந்து கொள்ள கடல் சுழற்சி மாதிரியை மேற்கொள்வதில் சென்னை நிறுவனம் (NCSCM) நிபுணத்துவம் பெற்றுள்ளது.
மேலும், ஏப்ரல் முதல் ஜூன் 2024 வரை SST -யை கண்காணிக்க MODIS Satellite தரவு பயன்படுத்தப்படும் மன்னார் வளைகுடாவில் தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 11 தீவுகள் மற்றும் பால்க் வளைகுடாவில் உள்ள சில தளங்களில் முதல்நிலை தகவல்களைப் பெறுவதற்காக விரைவான கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 22 -ம் திகதி முதல் 27 -ம் திகதி வரை இந்த துரித ஆய்வு நடக்கிறது. தூத்துக்குடி, மண்டபம், பால்க் வளைகுடா பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில், மன்னார் வளைகுடா பகுதியில் இயல்பான அளவை விட 33 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகியுள்ளது.
இதனால் பவளப்பாறைகள் வெளிரிப்போக தொடங்கின. Favites, Dipsastrea, Goniastrea மற்றும் Platygyra ஆகியவை பகுதியளவு மட்டுமே வெளிர தொடங்கியுள்ளன.
மேலும், பாக்கன் கூறுகையில், "அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்கள் முக்கியம் என்பதால் கண்காணிப்பு நடந்து வருகிறது. இப்பகுதியில் ஓரளவு நல்ல மழை பெய்தால் பவளப்பாறைகள் வெளிரிப்போவது குறையும். இல்லையென்றால் பெரும் கவலையை ஏற்படுத்தும்.
வாரத்திற்கு ஒருமுறை அல்லது பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை நீருக்கடியில் கணக்கெடுப்பைத் தொடர திட்டமிட்டுள்ளோம்.
அடுத்த கணக்கெடுப்பில், மன்னார் வளைகுடாவில் உள்ள அனைத்து 21 தீவுகள் மற்றும் பால்க் விரிகுடாவில் உள்ள 5 reef sites -களில் ஆய்வுகள் நடத்தப்பட்டு வெளிரிப்போகாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார் .
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |