குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு..25 பேர் பலியான பரிதாபம்
நைஜீரியாவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர்.
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் உள்ள ஓமலா பகுதியில் அகோஜெஜு-ஓடோ சமூகத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.
இங்கு வியாழக்கிழமை பிற்பகுதியில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. குடிமக்கள் வசிக்கும் பகுதிக்குள் புகுந்த ஆயுதமேந்திய மர்ம நபர்கள், அங்கிருந்த மக்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என 25 பேர் பலியானதாகவும், பலர் காயமடைந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து சமூகத் தலைவர் எலியாஸ் அடபோர் கூறுகையில், 'சமீபகால தாக்குதல்கள் இடைவிடாதவை. குழந்தைகள் உட்பட இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
துப்பாக்கி ஏந்தியவர்கள் வியாழன் மாலை சமூகத்திற்குள் நுழைந்து அவ்வப்போது சுடத் தொடங்கினர். எதிர்காலத் தாக்குதல்களைத் தடுக்க, அந்தப் பகுதிக்கு மேலும் துருப்புகளை அனுப்புமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளோம்' என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |