15 வயது சிறுமி மீது பதியப்பட்ட 19 கொலை வழக்கு: அதிர்ச்சி பின்னணி
தென் அமெரிக்க நாடான கயானாவில் பாடசாலை விடுதிக்கு நெருப்பு வைத்ததாக கூறி, 15 வயது சிறுமி மீது 19 கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.
சிறுமியின் செல்போன் பறிமுதல்
குறித்த தீ விபத்து சம்பவத்தில் 18 சிறுமிகளும் ஒரு 5 வயது சிறுவனும் பரிதாபமாக பலியாகினர். கொல்லப்பட்ட சிறுமிகளில் பெரும்பாலானோர் பூர்வகுடி மக்கள் என்றே தெரியவந்துள்ளது.
@reuters
தொடர்புடைய தீ விபத்து குறித்து பொலிசார் தெரிவிக்கையில், அந்த சிறுமியின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து அவர் விடுதிக்கு தீ வைத்துள்ளார் என விளக்கமளித்துள்ளனர்.
மேலும், அந்த சிறுமி தற்போது கயானாவில் உள்ள சிறுவர் தடுப்பு மையத்தில் அடைக்கப்பட்டுள்ளார். அத்துடன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இணையமூடாக முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முறைப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.
13 சடலங்களில் டி.என்.ஏ சோதனை
மே 22ம் திகதி அதிகாலையில், மாணவர்கள் அலறியடித்து எழுந்தபோது, விடுதி குளியலறை பகுதியில் தீ மற்றும் புகையை கண்டனர். இந்த விபத்தில் சிக்கிய ஏறக்குறைய 30 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்,
@getty
ஆபத்தான நிலையில் உள்ள இரண்டு சிறுமிகள் சனிக்கிழமையன்று கூடுதல் மருத்துவ கவனிப்பைப் பெற நியூயார்க்கிற்கு விமானம் மூலம் அனுப்பப்பட்டனர். இதனிடையே, உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்ட 13 சடலங்களில் டி.என்.ஏ சோதனைக்கு பின்னர் அடையாளம் காணப்பட்டதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும், உடல்களை உரிய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், முறையான நல்லடக்கம் செய்யப்படுவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.