ஹைதி நாட்டில் கொட்டி தீர்த்த கனமழை: 42 பேர் உயிரிழப்பு, 37 ஆயிரம் மக்கள் பாதிப்பு
கரீபியன் நாடான ஹைதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 42 பேர் வரை பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கொட்டித் தீர்த்த மழை
கரீபியன் நாடான ஹைதியில் கடந்த சனிக்கிழமை முதல் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.
இதனால் அங்குள்ள ஆறுகள் நிரம்பி வழிவது உடன் லியோகன் நகரம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்து மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
Getty Images
அத்துடன் வெள்ள நீர் வீடுகளிலும் விவசாய நிலங்களிலும் புகுந்து இருப்பதோடு நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தால் இடிந்து விழுந்துள்ளன.
42 பேர் வரை உயிரிழப்பு
இந்த கடுமையான வெள்ள பாதிப்புகளில் சிக்கி இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளனர், அத்தோடு 12 பேர் வரை காணாமல் போய் இருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
Anadolu Agency/Getty Images
அளவுக்கு மீறி கொட்டித் தீர்த்த இந்த கனமழையில் சுமார் 37 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் வெள்ளப் பாதிப்பில் சில இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது.
ஐ.நா வழங்கியுள்ள தகவலின் அடிப்படையில் கிட்டத்தட்ட 13 ஆயிரம் பேர் தங்களது இருப்பிடத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.