பிணைக் கைதிகள் விடுதலை.,60 நாள் போர் நிறுத்தம்: காசாவில் அமைதி திரும்புமா?
60 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் படையினர் ஒப்புதல் அளித்துள்ளனர்.
காசா போர் நிறுத்தம்
இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் நிலையில், புதிய திருப்பமாக ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஆதரவுடன் கத்தார் மற்றும் எகிப்து நாடுகள் நடத்திய மத்தியஸ்த பேச்சுவார்த்தைகளின் வெளிப்பாடாக ஹமாஸ் இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளது.
இந்த புதிய ஒப்பந்தத்தின் படி கிட்டத்தட்ட 60 நாட்கள் போர் நிறுத்தம் அமுலில் இருக்கும், அத்துடன் உயிருடன் இருப்பது உறுதி செய்யப்பட்ட 10 பிணைக் கைதிகளுடன் சேர்த்து மொத்தம் 28 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுகிறார்.
இதற்கு மாற்றாக 200 பாலஸ்தீன பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் பதில் என்ன?
ஹமாஸ் சம்மதம் தெரிவித்துள்ள இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இன்னும் இரண்டு தினங்களில் இஸ்ரேல் பதிலளிக்கும் என எதிர்பார்ப்பதாக பாலஸ்தீன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆனால், இஸ்ரேலிய அரசு ஒளிபரப்பு நிறுவனத்தின் தகவல் படி, மீதமுள்ள 50 பிணைக் கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என பிரதமர் நெதன்யாகுவின் அலுவலகம் கோரி இருப்பதாக தெரியவந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |