இஸ்ரேல்-காசா போர்: 60 நாள் போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் ஒப்புதல்
இஸ்ரேல்-காசா இடையிலான போரில் 60 நாள் போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் ஒப்புகொண்டுள்ளது.
22 மாதங்களாக நீடிக்கும் இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவர, ஹமாஸ் 60 நாள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புகொண்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் காஸாவில் உள்ள கைதிகளை விறுவிப்பதும், இஸ்ரேல் படைகள் படிப்படியாக பின்வாங்குவதும் அடங்கும்.
ஹமாஸ் ஆயுதங்களை ஒப்படைக்கவேண்டும் என்றும், அணைத்தது கைதிகளும் விடுவிக்கப்படவேண்டும் என்றும் இஸ்ரேல் வலியுறுத்துகிறது.
ஆனால் ஹமாஸ், பாலஸ்தீன தேசம் உருவாகும் வரை அது நடக்காது என நிராகரித்துள்ளது.
இந்த நிலையில்லா சூழ்நிலையில், காசா நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களை நாடுகின்றனர்.
மக்கள் பாதுகாப்பிற்காக தெற்கு பகுதிக்கு இடமாற்றம் செய்ய இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. ஆனால், ஹமாஸ் அதை "புதிய இந அழிப்பு முயற்சி" என கண்டித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Hamas ceasefire 2025, Gaza hostage release deal, Israel Gaza war update, Gaza City evacuation, Gaza ceasefire negotiations