இஸ்ரேலால் கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர் - ட்ரோன் வந்தது முதல், அவரின் இறுதி நொடி வீடியோ!
ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரை கொன்றதாக இஸ்ரேல் உறுதிப்படுத்தியுள்ளது.
இஸ்ரேலால் கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர்
வியாழக்கிழமை காசாவின் ரஃபாவில் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இஸ்ரேலிய இராணுவத்தால் சின்வார் தற்செயலாகக் கைப்பற்றப்பட்டார். ட்ரோன் மூலம் அவர் அடையாளம் காணப்பட்டார்.
சின்வாரின் உடல் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டது. அவரது அடையாளத்தை உறுதிப்படுத்த DNA, பல் பதிவுகள் மற்றும் கைரேகைகள் எடுக்கப்பட்டன.
ஹமாஸ் தலைவரின் கடைசி தருணங்கள் அடங்கிய வீடியோவையும் இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது.
வெளியான வீடியோ
இஸ்ரேலிய இராணுவம் ட்ரோன்கள் மூலம் அப்பகுதியை ஆய்வு செய்ததன் பின்னரே முன்னேறி உள் செல்கின்றது.
வியாழக்கிழமை இதேபோன்ற நடவடிக்கையின் போது, ஒரு ட்ரோன் ஒரு கட்டிடத்திற்குள் கதிரையில் அமர்ந்திருந்த ஒருவரைக் கண்டு, ட்ரோன் அந்த திசையில் சென்றபோது, அந்த நபர் அதன் அடையாளத்தை மறைக்க ட்ரோன் மீது ஒரு மரத் துண்டை வீசினார்.
இருப்பினும், அதற்குள் ட்ரோன் யாஹ்யா சின்வாரை அடையாளம் கண்டு விட்டது.
Raw footage of Yahya Sinwar’s last moments: pic.twitter.com/GJGDlu7bie
— LTC Nadav Shoshani (@LTC_Shoshani) October 17, 2024
ட்ரோனின் அடையாளத்தை உறுதிப்படுத்திய சில நொடிகளில், இஸ்ரேல் கட்டிடத்தை தரைமட்டமாக்கியது.
சின்வாருடன் மேலும் இரண்டு பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
கடந்த ஜூலை மாதம் ஹமாஸ் தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்ட பிறகு, யாஹ்யா சின்வார் ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |