நெருங்கும் வெற்றி... ஹமாஸ் படைகளுக்கு அடுத்த இடியை இறக்கிய இஸ்ரேல்
ஈரானில் ஹமாஸ் அரசியல் தலைவரின் படுகொலையை அடுத்து, ராணுவத் தலைவரும் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தற்போது உறுதி செய்துள்ளது.
திட்டமிட்டத் தாக்குதல்
ஹமாஸ் அரசியல் தலைவர் Ismail Haniyeh படுகொலை செய்யப்பட்டு மத்திய கிழக்கில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திவரும் நிலையில், தற்போது ஹமாஸ் இராணுவத் தலைவர் Mohammed Deif ஜூலை மாதம் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தரப்பு உறுதி செய்துள்ளது.
ஜூலை 13 அன்று கான் யூனிஸ் பகுதியில் திட்டமிட்டத் தாக்குதல் ஒன்றை இஸ்ரேல் ராணுவம் முன்னெடுத்தது. அதில் Mohammed Deif கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தரப்பு தற்போது அறிவித்துள்ளது.
ஆனால் ஹமாஸ் தரப்பு இதுவரை அவரது இறப்பை உறுதி செய்யவில்லை. தெற்கு இஸ்ரேலில் அக்டோபர் 7 தாக்குதல்களைத் திட்டமிடுவதற்குப் பொறுப்பான நபர்களில் டெய்ஃப் ஒருவர் என்று இஸ்ரேல் கூறுகிறது.
குறித்த தாக்குதலில் 1,200 பேர்கள் கொல்லப்பட்டதுடன், 251 பேர்கள் பிணைக் கைதியாகப் பிடிக்கப்பட்டனர். புதன்கிழமை, ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரான் விஜயத்தின் போது கொல்லப்பட்டார்.
ஆனால் இஸ்மாயில் ஹனியே படுகொலைக்கு தாங்கள் தான் பொறுப்பு என இஸ்ரேல் இதுவரை அறிவிக்கவில்லை. அக்டோபர் தாக்குதலை அடுத்து அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவுடன், காஸா மீது கடுமையான தாக்குதலை இஸ்ரேல் முன்னெடுத்தது.
மிகவும் தேடப்படும் நபர்
ஹமாஸ் படைகளை மொத்தமாக ஒழிப்பதே தங்கள் இலக்கு என்றும் அறிவித்தது. இஸ்ரேல் முன்னெடுத்த தாக்குதலில் இதுவரை கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 39,480 என்றே கூறப்படுகிறது.
ஹமாஸ் படைகளின் ராணுவப் பிரிவான Izzedine al-Qassam என்பதன் தலைமைப் பொறுப்பில் இருந்தவர் Mohammed Deif. பல தசாப்தங்களாக இவர் இஸ்ரேலின் மிகவும் தேடப்படும் நபர்களில் ஒருவராக இருந்தார்.
மேலும் பல கொலை முயற்சிகளில் இருந்தும் தப்பினார். 2002ல் இவர் மீது நடந்த தாக்குதலில் கண் ஒன்றையும் இழந்தார். 1989ல் இஸ்ரேலிய அதிகாரிகளால் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆனால் அவர் விடுவிக்கப்பட்டதன் பின்னர், தாம் அனுபவித்த சித்திரவதைகளுக்கு பழி தீர்க்கும் வகையில் இஸ்ரேல் ராணுவத்தினரை சிறை பிடிக்கும் திட்டத்தை செயல்படுத்தி வந்தார்.
மட்டுமின்றி, ஹமாஸ் படைகள் காஸாவில் இருந்து இஸ்ரேலுக்குள் நுழைவதற்கு சுரங்கப்பாதைகளை அமைப்பதில் பொறியியலாளர்களுக்கு இவர் உதவியதாகவும் கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |