கூண்டுக்குள் இறங்கி சிங்கக் குட்டியை திருட முயன்ற நபருக்கு நிகழ்ந்த பயங்கரம்...
சிங்கம் ஒன்றின் கூண்டுக்குள் நுழைந்து அதன் குட்டியைத் திருட முயன்றுள்ளார் ஒருவர்.
அவரை அடித்துக் கொன்று தின்றுவிட்டதாம் அந்த சிங்கம்.
கானா நாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒருவர் Accra உயிரியல் பூங்காவைச் சுற்றிவந்துள்ளார்.
பின்னர் அவர் சிங்கம் ஒன்றின் கூண்டுக்குள் இறங்கி, அதன் குட்டியைத் திருட முயன்றதாக கூறப்படுகிறது.
Credit: Getty
பொதுவாகவே குட்டியுடன் இருக்கும் எந்த விலங்கும் ஆக்ரோஷமாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு சூழலில், இந்த நபர் அந்த சிங்கத்தின் கூண்டுக்குள் இறங்கி அதன் குட்டியைத் திருடமுயன்றிருக்கிறார்.
ஆனால், அவர் தனது முயற்சியில் தோல்வியடைய, தன் கூண்டுக்குள் ஒருவர் நிற்பதைக் கண்ட சிங்கம் அவரை அடித்துக்கொன்றுள்ளது.
பொலிசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ள நிலையில், இதுபோன்ற செயல்களில் இறங்கவேண்டாம் என அதிகாரிகள் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
Credit: Accra Zoo