திருமணம் ஆகாதவர்களுக்கு உதவித்தொகை அறிவித்த அரசு!
இந்திய மாநிலம் ஹரியானாவில் திருமணம் ஆகாதவர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை அளிக்கப்படும் என மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.
குறைதீர் கூட்டம்
அரியானாவைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், கர்னல் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் பங்கேற்றார்.
அப்போது பென்ஷன் குறித்து அவர் அளித்த புகாரில் தனக்கு திருமணம் ஆகவில்லை என்று குறிப்பிட்டார்.
மக்களின் குறைகளை கேட்டறிந்த மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார், முதியவரின் புகாரையும் கருத்தில் கொண்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
Representational Image
மாதாந்திர உதவித்தொகை
அதாவது, அரியானா மாநிலத்தில் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும், ஒரு மாதத்திற்குள் இதுகுறித்து அரசு முடிவெடுக்கும் என்றார்.
ஆனால், 45 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும் வகையில் மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
இதன்மூலம் அரியானா மாநிலத்தில் சுமார் 2 லட்சம் பேர் பயன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Getty Images/iStockphoto
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |