ஹவாயின் மெளய் தீவில் காட்டுத் தீ: உறுதிசெய்யப்பட்ட 6 பேரின் உயிரிழப்பு
ஹவாயின் மெளய் தீவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயில் சிக்கி 6 பேர் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
காட்டுத்தீ
புகழ்பெற்ற சுற்றுலா தளங்களில் ஒன்றான ஹவாயின் மெளய் தீவில் பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.
இந்த காட்டுத் தீயானது குடியிருப்பு பகுதிகளுக்கு பரவி தொடங்கியுள்ள நிலையில், இதில் 6 பேர் வரை உயிரிழந்து இருப்பதாக உள்ளூர் அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்துள்ளனர்.
AP
மேலும் 20 பேர் வரை கடுமையான தீ காயங்களுக்கு உள்ளாகி இருப்பதாகவும், அதிகப்படியான மக்கள் அவர்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த காட்டுத் தீயால் ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரம் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தொடரும் தேடுதல்
இந்நிலையில் காட்டுத் தீயில் 6 பேர் உயிரிழந்து இருப்பது உறுதியாகியுள்ளது என்பதை அறிவிப்பதில் வருத்தமடைகிறேன் என்று மெளய் நகர மேயர் ரிச்சர்ட் பிசென் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
eff Melichar/TMX
அத்துடன் மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் தீவிரமாக தொடர்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |