ஹவாய் காட்டுத் தீ விபத்தில் அதிகரிக்கும் உயிரிழப்பு: வெளியேறிய 14,900 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்
ஹவாயின் மெளயி தீவில் ஏற்பட்ட காட்டுத்தீ சம்பவத்தில் இதுவரை 55 பேர் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
காட்டுத்தீ
ஹவாயின் சுற்றுலாத் தீவுகளில் ஒன்றான மெளயி-ல்(Maui) ஏற்பட்டுள்ள பயங்கரமான காட்டுத் தீயில் இதுவரை 55 பேர் உயிரிழந்து இருப்பதுடன் நூற்றுக்கணக்கான பேர் காணாமல் போய் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் மாகாண கவர்னர் தெரிவித்த தகவலில், மெளவி தீவில் காட்டுத்தீயால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரிசெய்ய பல ஆண்டு காலம் தேவைப்படலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
LATEST: At least 55 dead in Maui wildfires
— NBC News (@NBCNews) August 11, 2023
• 6 fires still burning in Maui and the Big Island
• Lahaina fire now 80% contained; many historic landmarks are lost
• Hawaii governor says fires are likely the largest natural disaster in state historyhttps://t.co/RNm7ydsTyv pic.twitter.com/uFG5By1Bl8
மேலும் வரலாற்று சுற்றுலா நகரமான லஹைனாவில்(Lahaina) 1000 வீடுகள் வரை தீயினால் சேதமடைந்து இருப்பதாக ஜோஸ் க்ரீன் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் தகவல் தொடர்பு அமைப்புகள் வீழ்ச்சியடைந்து இருப்பதால் பொதுமக்களின் இருப்பிடத்தை கண்டறிய மிகவும் சிரமமாக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெளியேறிய வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்
இந்நிலையில் ஹவாய் தீவில் ஏற்பட்டுள்ள இந்த காட்டுத் தீயை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் “முக்கிய பேரழிவாக” வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.
EPA
அத்துடன் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவும் விதமாக பெடரல் நிதி விடுவிக்கப்படும் என்றும் உறுதி வழங்கியுள்ளார்.
இதனிடையே வியாழக்கிழமை 14,900 சுற்றுலா பார்வையாளர்கள் மெளயி தீவில் இருந்து விமானம் மூலம் வெளியேறி இருப்பதாக மெளயி மாகாண அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |