தனிமைப்படுத்தலுக்கு செல்ல மறுத்த இளைஞரை விரட்டி விரட்டியடித்த சுகாதார அதிகாரிகள்! வீடியோ ஆதாரம்
சீனாவில் கொரோனா தனிமைப்படுத்தல் முகாமிற்கு செல்ல மறுத்த இளைஞரை சுகாதார அதிகாரிகள் விரட்டி விரட்டியடித்த காணொளி இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் அந்நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான ஷாங்காய்-ல் நடந்துள்ளது. உலகம் முழுவதும் சற்று குறைந்துள்ள கொரோனா வைரஸ், தற்போது சீனாவில் தீவிரமாக பரவதொடங்கியுள்ளது.
கொரோன பரவலை கட்டுப்படுத்த ஷாங்காய் நகரில் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், நகரில் தினசரி பிசிஆர் சோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதேசமயம், சுகாதார ஊழியர்கள், தன்னார்வலர்கள், டெலிவரி நபர்கள் அல்லது சிறப்பு அனுமதி பெற்றுள்ள நபர்கள் மட்டுமே சாலையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஷாங்காய் நகரில் கொரோனா தனிமைப்படுத்தல் முகாமிற்கு செல்ல மறுத்த இளைஞரை சுகாதார அதிகாரிகள் விரட்டி விரட்டியடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த வீடியோவில், பிபிஇ கிட் அணிந்திருக்கும் 10 சுகாதார அதிகாரிகள், சாலையில் வைத்து இளைஞரை சரமாரியாக தாக்குகின்றனர்.
CHINA: The covid health authorities were filmed trying to arrest a person who was refused to go to a covid quarantine camp.
— Apex World News (@apexworldnews) April 4, 2022
Shanghai, one of largest and busiest city in China is under lockdown for last two weeks. Daily PCR test is mandatory, Daily Real Time News reported. pic.twitter.com/h5GWTJWWs2
ஷாங்காய் நகரில் 12-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் தனிமைப்படுத்தல் மையங்களாக மாற்றப்பட்டுள்ளது, அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான நோயாளிகளை தனிமைப்படுத்த முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.