கன மழை, மண் சரிவு... 200 கடந்த இறப்பு எண்ணிக்கை: இதுவரை நிகழாத துயரம்
தென்மேற்கு எத்தியோப்பியாவில் பேய் மழையை அடுத்து ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 200 கடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்
ஆப்பிரிக்க நாட்டில் இதுபோன்ற ஒரு பேரிடர் இதுவரை ஏற்பட்டதில்லை என்றே அதிகாரிகள் தரப்பு தெரிவிக்கின்றனர். Kencho Shacha Gozdi மாவட்ட அதிகாரிகள் தரப்பு செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள அறிக்கையில்,
இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் உயிர் பிழைத்தவர்களைத் தேடும் உள்ளூர் மக்கள் மண்வெட்டிகளையும், வெறும் கைகளையும் பயன்படுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.
ஏற்கனவே ஏற்பட்ட மண் சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த மக்களே, திங்களன்று பகல் ஏற்பட்ட இன்னொரு மண் சரிவில் சிக்கி மரணமடைந்துள்ளனர். மண் சரிவில் சிக்கியவர்களின் எண்ணிக்கை இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்றே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 229 பேர்கள் சடலமாக
குடும்பத்துடன் பலர் மண் சரிவில் சிக்கி பலியாகியுள்ளனர். போதுமான வசதிகள் இல்லாததால் மக்கள் தங்கள் உற்றார் உறவினர்களை தேடும் பணியில் மண்வெட்டிகளையும், வெறும் கைகளையும் பயன்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Gofa மண்டலம் என்பது தெற்கு எத்தியோப்பியா பிராந்தியத்தில் மலை சார்ந்த பகுதியாகும். ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பலத்த சேதத்தை ஏற்படுத்தியதுடன், ஆயிரம் மக்கள் வரையில் இடம்பெயரும் நிலை ஏற்பட்டது.
தெற்கு எத்தியோப்பாவில் கன மழையால் கடந்த 2016ல் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 41 பேர்கள் மரணமடைந்தனர். தற்போது தென்மேற்கு எத்தியோப்பியாவில் ஏற்பட்டுள்ள அடுத்தடுத்த மண் சரிவில் சிக்கி இதுவரை 229 பேர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |