கியூபாவில் கொட்டி தீர்த்த கனமழை: தரைப்பாலங்கள் மூழ்கியதால் மக்கள் கடும் அவதி
தீவு நாடான கியூபாவில் பெய்த கன மழையால் அங்குள்ள ஆறுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கொட்டி தீர்க்கும் கனமழை
தீவு நாடான கியூபாவில் புயல் காரணமாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது, இதனால் தீவு நாட்டின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதுடன் பல இடங்களில் உள்ள பாலங்கள் நீரில் மூழ்கி இருப்பதால் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
Elsa pounded Cuba with heavy rain and strong winds as it made landfall on the island nation’s south-central coast, after wreaking havoc and causing at least three deaths elsewhere in the Caribbean https://t.co/gKf9LckpN1 pic.twitter.com/3tpxIg9edX
— Reuters (@Reuters) July 6, 2021
போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் பல கிராமங்களில் வசிக்கும் மக்கள் வெள்ள பாதிப்புகளில் இருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.
2 நாட்களுக்கு நீடிக்கும் கனமழை
தீவு நாடான கியூபாவின் jiguani நகரத்தை தண்ணீர் சூழ்ந்து இருப்பதால் பாதுகாப்பான இடங்களுக்கு ஏராளமான மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் நாட்டின் வானிலை ஆய்வு மையம் வழங்கியுள்ள தகவலில், அடுத்த 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.