அடுத்த 3 நாட்களுக்கு 12 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவி வருகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Sameer Markande
எந்தெந்த மாவட்டங்கள்?
இதனால் இன்று(நவ 21) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய 16 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் (நவ 22) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்.
மேலும் தூத்துக்குடி, ராமநாதபுரம், திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் ஆகிய 9 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Arun Sankar/AFP
நாளை மறுதினம் (நவ 23) தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |