தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.
கனமழைக்கு வாய்ப்பு
சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் நேற்று செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், "லட்சத்தீவு, கேரளா மற்றும் வடதமிழகப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவும் காரணத்தால் தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இன்று (ஓக்டோபர் 09) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
மேலும், கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர் ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் நாளை இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல்மிதமான மழை பெய்யக் கூடும்.
தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, தென்மேற்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வரும்12-ம் திகதி வரை சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம்" என்று கூறப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |