நேருக்கு நேர் மோதிய ஹெலிகொப்டர்கள்: கடலில் விழுந்து விபத்து
ஜப்பானில் 2 கடற்படை ஹெலிகொப்டர் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
பசிபிக் பெருங்கடல் பகுதியில் சீனா தொடர்ந்து அத்துமீறி வருகிறது, இதன் காரணமாக ஜப்பான் கடலோர பாதுகாப்பை அதிகரித்து வருகிறது.
இதன் ஒருபகுதியாக ஜப்பான் ராணுவம் மற்றும் கடற்படை பாதுகாப்பில் ஈடுபட்டு வருகிறது.
இதன்போது நாகசாகி கடற்படை தளத்தில் இருந்து வந்த ஹெலிகொப்டர் ஒன்றும், டொகுஷிமா கடற்கரை தளத்தில் இருந்து வந்த ஹெலிகொப்டர் ஒன்றும் இரவு நேர பயிற்சியில் ஈடுபட்டிருந்தன.
The official website of the Japan Maritime Self-Defense Force via AP
அந்நாட்டு நேரப்படி இரவு 10.38 மணியளவில் இரண்டு ஹெலிகொப்டர்கள் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இதனையடுத்து தேடுதல் வேட்டையில் மீட்புப்படையினர் இறங்கிய போது கடலில் ஹெலிகொப்டரின் பாகங்கள் கிடந்தன.
எனவே இரண்டு ஹெலிகொப்டர்களும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
ஒருவரது உடல் பாகம் மட்டும் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், மற்ற ஏழு பேரின் கதி என்ன என்பது குறித்து தெரியவரவில்லை.
மீட்புப்பணிகள் நடந்து வரும் வேளையில் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
AP Photo/Emily Wang, File