அமெரிக்காவில் அடுக்குமாடி கட்டிடம் மீது ஹெலிகாப்டர் மோதி விபத்து: வீடியோ
அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மீது ஹெலிகாப்டர் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஹெலிகாப்டர் விபத்து
திங்கட்கிழமை அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பாம்பானோ(Pompano Beach) கடற்கரைக்கு அருகே உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் தீயணைப்பு மீட்பு ஹெலிகாப்டர் ஒன்று உள்ளூர் நேரப்படி 9 மணிக்கு முன்னதாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக இணையத்தில் வெளியான வீடியோவில், ஹெலிகாப்டரின் நடுப்பகுதியில் தீ எரிவதை பார்க்க முடிகிறது, அத்துடன் ஹெலிகாப்டர் தரையில் மோதுவதற்கு முன்னதாக 2 துண்டுகளாக விழுவது தெரிகிறது.
#Ongoinbg a BSO Fire Rescue EC-135 crashes in Pompano Beach, Florida (US). First sources state all 3 aboard survived, 2 injured, aircraft destroyed. Video shows helicopter on fire and a tail boom failure before going down in an urban area. Updates when possible. pic.twitter.com/OLUMYrQG4Q
— Air Safety #OTD by Francisco Cunha (@OnDisasters) August 28, 2023
தீயணைப்பு மீட்பு ஹெலிகாப்டர் வடக்கு லாடர்டேலில்(Lauderdale) ஏற்பட்ட சம்பவத்திற்காக புறப்பட்டு சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டு இருப்பதாகவும், இந்த சம்பவத்தின் போது 3 பேர் வரை விமானத்தில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு பேர் உயிரிழப்பு
தீயணைப்பு மீட்பு ஹெலிகாப்டரில் ஏற்பட்ட இந்த விபத்தில் விமானத்தில் இருந்த ஒருவர் மற்றும் தரையில் இருந்த ஒருவர் என இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
Pic: WPLG-TV
அத்துடன் விமானத்தில் இருந்த 2 பேர் மற்றும் தரையில் இருந்த 2 பேர் என மொத்தம் 4 பேர் உயிருக்கு ஆபத்து இல்லாத காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |