மியான்மரில் 1000-த்தை தாண்டிய பலி எண்ணிக்கை: தமிழர்கள் தொடர்புகொள்ள வேண்டிய எண்கள்
மியான்மர் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் பலியானோர் எண்ணிக்கை 1000-த்தை தாண்டியுள்ளது.
1000-த்தை தாண்டிய பலி
மண்டலே நகரை மையமாகக் கொண்டு நேற்று காலை 7.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனால் பல கட்டிடங்கள், வீடுகள் இடிந்து விழுந்ததில் நூற்றுக்கணக்கானவர்கள் பலியாகினர்.
தலைநகர் நேபிடா, மண்டலே உட்பட 6 மாகாணங்களில் பல வீடுகள் இடிந்ததில் 700 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
அவரச நிலை பிறக்கப்பட்டு மீட்புப்பணிகள் நடந்து வரும் நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 1000-த்தை தாண்டியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
தமிழர் நலத்துறை
இராணுவ ஆட்சிக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் 1002 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 2376 பேர் காயமடைந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே நிலநடுக்கம் தொடர்பான தமிழர்களுக்கான உதவி எண்களை, அயலகத் தமிழர் நலத்துறை அறிவித்துள்ளது.
அதன்படி மியான்மர், தாய்லாந்து நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள், 1800 309 3793, +91 80690 09901 மற்றும் +91 80690 09900 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |