கான்கிரீட் சுவரால் பறிபோன 179 உயிர்கள்... தோல்வியில் முடிந்த விமானியின் முயற்சி
தென் கொரிய விமானியால் மிக சாமர்த்தியமாக விமானம் தரையிறக்கப்பட்டும், கான்கிரீட் சுவர் காரணமாகவே பேரிழப்பு ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
விமானம் நெருப்பு கோளமாக
தென் கொரியாவில் 179 பேர்களின் உயிரைப் பறித்த விமான விபத்து தொடர்பில் நிபுணர்கள் தரப்பு தங்கள் கருத்தை பதிவு செய்துள்ளனர். அதில், பறவைகள் மோதியதால் விமானம் செயலற்ற நிலைக்கு திரும்பியிருந்தது என்றும்,
ஆனால் விமானி சாமர்த்தியமாக தரையிறக்கியிருந்தும், கான்கிரீட் சுவரில் மோதியதன் பின்னரே விமானம் நெருப்பு கோளமாக வெடித்தது என குறிப்பிட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தினரும் அதிகாரிகள் தரப்பும் தற்போது விபத்து குறித்த உண்மையான காரணம் என்ன என்பதைத் தேடி வருகின்றனர். விமானம் எரிந்து சாம்பலான பகுதியில் தற்போது ஆதாரங்களைத் தேடி வருகின்றனர்.
பிரித்தானியாவின் மிகவும் அனுபவம் மிக்க நிபுணர் ஒருவர் தெரிவிக்கையில், அந்த விமான நிலையத்தின் அமைப்பே இப்படியான மிக மோசமான விபத்துக்கு காரணம் என குறிப்பிட்டுள்ளார்.
கான்கிரீட் சுவரால் பறிக்கப்பட்டுள்ளது
தரையிறங்கிய விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி கான்கிரீட் சுவரில் மோதியதன் பின்னரே நெருப்பு கோளமாக மாறியது. ஓடுபாதையின் முடிவில் 2,800 மீற்றர் தொலைவில் அந்த கான்கிரீட் சுவர் அமையாமல் இருந்திருந்தால் இந்த விபத்து நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இதனால் மொத்த பயணிகளின் உயிரைக் காக்கும் விமானியின் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. மேலும், பொருத்தமான தரையிறங்கும் கருவி இல்லாமல் தரையிறங்குவது எப்படி என்பதை விமானிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதனால் அதை துல்லியமாக கணிக்க முடிந்த விமானியால் சாமர்த்தியமாக விமானத்தை தரையிறக்க முடியும். தென் கொரிய விமான விபத்து விமானியால் தவிர்க்கப்பட்டு, கான்கிரீட் சுவரால் பறிக்கப்பட்டுள்ளது என்றே பிரித்தானிய நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |