சொன்னது போலவே தொடங்கிய ஹிஸ்புல்லா: அவசர கூட்டத்தைக் கூட்டிய அமெரிக்கா
அமெரிக்கா அஞ்சியது போலவே ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பானது இஸ்ரேல் மீது ட்ரோன் தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சரமாரியான ட்ரோன் தாக்குதல்
ஈரான் ஆதரவு லெபனான் ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா தற்போது வடக்கு இஸ்ரேல் மீது சரமாரியான ட்ரோன் தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இது தாக்குதலுக்கும் படுகொலைக்குமான பதிலடி என்றே ஹிஸ்புல்லா தரப்பு குறிப்பிட்டுள்ளது. தெற்கு லெபனானில் பல கிராமங்கள் மீது இஸ்ரேல் தொடுத்த தாக்குதலுக்கும் இது பதிலடியாக குறிப்பிடப்படுகிறது.
ஹிஸ்புல்லாவின் ட்ரோன் தாக்குதலை உறுதி செய்துள்ள இஸ்ரேல், இரண்டு ராணுவ வீரர்களுக்கு காயம் ஏற்பட்டதாகவும், தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் திடீரென்று எழுந்த நெருக்கடிக்கு காரணம், லெபனானில் ஹிஸ்புல்லா தளபதி ஒருவரையும் ஈரானில் ஹமாஸ் தலைவர் ஒருவரையும் இஸ்ரேல் படுகொலை செய்ததை குறிப்பிடுகின்றனர்.
வெள்ளைமாளிகை தகவல்
ஆனால் தற்போதைய தாக்குதலானது எல்லையில் தொடர்ந்து மோதல்கள் ஏற்பட்டு வருவதன் பதிலடியாகவும் பார்க்கப்படுகிறது. இஸ்ரேல் மீதான ஈரான் பதிலடித் தாக்குதலின் அச்சம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தேசிய பாதுகாப்புக் குழுவை அவசரமாக கூட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் மீது எப்போது வேண்டுமானாலும் ஈரான் தாக்குதலை முன்னெடுக்கலாம் என்ற நிலையில், அமெரிக்கா கூடுதல் போர் விமானங்கள் மற்றும் கப்பல்களை மத்திய கிக்கில் குவித்து வருகிறது.
அத்துடன், இந்த விவகாரம் தொடர்பில் ஜோர்தான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவிடமும் ஜோ பைடன் விவாதித்துள்ளதாக வெள்ளைமாளிகை தகவல் வெளியிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |