கோலான் குன்றுகள் மீது திடீர் ராக்கெட் தாக்குதல்: கடும் கோபத்தில் இஸ்ரேல்
கோலான் குன்றுகள் மீது நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 12 பேர் கொல்லப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோலான் குன்றுகள் மீது தாக்குதல்
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் பதற்றம் இன்னும் தனியாத நிலையில், இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ள கோலான் குன்றுகள் பகுதிகள் மீது நடத்தப்பட்ட திடீர் ராக்கெட் தாக்குதலில் குழந்தைகள் மற்றும் இளம் வயதினர் உட்பட 12 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
அத்துடன் 10 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து இருப்பதாக இஸ்ரேல் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலை லெபனான் நாட்டை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஹெஸ்புல்லா அமைப்பினர் நடத்தி இருப்பதாகவும், அவர்கள் ஏவிய ராக்கெட் ட்ரூஸ் நகரமான மஜ்தல் ஷாம்ஸ் பகுதியில் விழுந்ததாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த தாக்குதலுக்கான மிகப்பெரிய பதிலடி விரைவில் வழங்கப்படும் என்று இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.
ஆனால் இஸ்ரேலிய படைகளின் இந்த குற்றச்சாட்டை ஹெஸ்புல்லா அமைப்பினர் மறுத்துள்ளனர்.
பதிலடி தாக்குதல்
இந்நிலையில், லெபனானில் ஹெஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக இஸ்ரேலிய விமானப் படையில் சமீபத்திய தகவல் தெரிவித்துள்ளது.
ஹெஸ்புல்லா அமைப்பினர் 7 இலக்குகளை குறிவைத்து ஞாயிற்றுக்கிழமை இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |