பெரும் விலை கொடுக்க நேரிடும்... 11 பேர் பலியான சம்பவத்தில் மிரட்டல் விடுத்த இஸ்ரேல்
இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள கோலன் பகுதி மீது முன்னெடுக்கப்பட்ட தாக்குதலை அடுத்து ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிராக கடும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா
கோலன் பகுதியில் அமைந்துள்ள கால்பந்து மைதானம் மீது ராக்கெட் வீச்சு நடத்தப்பட்டுள்ளது. இதில் குறைந்தது 11 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், ஒரு டசினுக்கும் அதிகமானோர் காயங்களுடன் தப்பியுள்ளனர்.
குறித்த தாக்குதலை ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பு முன்னெடுத்துள்ளதாகவே இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், ஹிஸ்புல்லா மற்றும் லெபனானுக்கு எதிரான போருக்கு இது வழிவகுக்கும் என்றே வெளிவிவகார அமைச்சர் Israel Katz தெரிவித்துள்ளார்.
அனைத்து வரம்புகளையும் ஹிஸ்புல்லா மீறியுள்ளதாக குறிப்பிட்டுள்ள Israel Katz, பதிலடி உறுதி என தெரிவித்துள்ளார். இதனிடையே, இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு,
ஹிஸ்புல்லா கடும் விலை கொடுக்க நேரிடும் என்று கூறினார். ஆனால் ஹிஸ்புல்லா தரப்பு தாக்குதல் குறித்து மறுப்பு தெரிவித்துள்ளதுடன், தங்களுக்கு தொடர்பில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
தாக்குதல் என்பது கோழைத்தனம்
இந்த நிலையில், இஸ்ரேல் ராணுவம் பதிலடிக்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ராணுவ செய்தித் தொடர்பாளர் Daniel Hagari தெரிவிக்கையில்,
சனிக்கிழமை நடந்த ராக்கெட் தாக்குதல் சம்பவமானது ஹமாஸ் படைகள் முன்னெடுத்த அக்டோபர் 7 தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய குடிமக்கள் மீதான மிகக் கொடிய தாக்குதலாகும் என்றார்.
இதனிடையே, லெபனான் அரசாங்கமும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், அப்பாவி மக்கள் மீதான தாக்குதல் என்பது கோழைத்தனம் என விமர்சித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |