பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை கைது செய்தவற்கான தடை நீட்டிப்பு
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கைது செய்வதற்கான தடையை, உயர்நீதிமன்றம் வரும் 31ஆம் திகதி வரை நீட்டித்துள்ளது.
இம்ரான்கான் கைது
பாகிஸ்தான் நாட்டில் கடந்த 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற பொது தேர்தலுக்கு பிறகு, இம்ரான்கான்(imran khan) தலைமையில் அரசு அமைந்தது.
@filephoto
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொண்டு வந்த நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில், தோல்வியடைந்த இம்ரான்கானின் பிரதமர் பதவி பறிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இம்ரான்கான் மீது ஊழல் முதல் பயங்கரவாதம் வரை, பல்வேறு பிரிவுகளின் கீழ் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டது.
தடை நீட்டிப்பு
இதனிடையே கடந்த மே 9ஆம் திகதி, தன் மீது தொடுக்கப்பட்ட இரு ஊழல் வழக்குகளில் ஜாமீன் பெறுவதற்காக இம்ரான்கான் உயர் நீதிமன்றத்திற்கு வந்தார்.
@ap
அப்போது தேசிய ஊழல் தடுப்பு அதிகாரிகளும், துணை ராணுவ படையினரும் நீதிமன்ற வளாகத்தின் முன்பு வைத்து இம்ரான்கானை அதிரடியாக கைது செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து கைது நடவடிக்கை சட்ட விரோதமானது என அறிவித்த நீதிமன்றம், இம்ரான்கானை விடுவிக்குமாறு உத்தரவிட்டது.
@ap
பின்னர் உயர்நீதிமன்றம் இரு வாரத்திற்கு முன் ஜாமீன் வழங்கியது, மேலும் வரும் மே 17ஆம் திகதி வரை வேறு எந்த வழக்கிலும் கைது செய்யகூடாதென தடை விதித்திருந்தது.
இந்நிலையில், இம்ரான்கான் தரப்பு கோரிக்கையை ஏற்று, அந்த தடையை வரும் மே 31ஆம் திகதி வரை இஸ்லாமாபாத் நீதிமன்றம் நீடித்துள்ளது.