உலகிலேயே அதிக மரணதண்டனையை நிறைவேற்றிய ஆசிய நாடு
உலகளவில் அரசு உத்தரவின் பேரில் நிறைவேற்றப்படும் மரணதண்டனைகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்தில் மிக உயர்ந்த மட்டத்திற்கு அதிகரித்துள்ளது.
சீனாவில் ஆயிரக்கணக்கான
சர்வதேச மன்னிப்பு சபையின் புதிய அறிக்கை ஒன்று இதை வெளிப்படுத்தியுள்ளது. 2024 ஆம் ஆண்டில் 15 நாடுகளில் 1,500 க்கும் மேற்பட்டோர் நீதிமன்றங்களால் தூக்கிலிடப்பட்டனர்.
இதில் மூன்று மத்திய கிழக்கு நாடுகளான ஈரான், ஈராக் மற்றும் சவுதி அரேபியாவில் 91 சதவீத மரணதண்டனை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது.
ஆனால் உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாம் என்றும், உலகில் அதிகமாக மரணதண்டனை நிறைவேற்றப்படும் நாடான சீனாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்றே நம்பப்படுகிறது.
சீனாவில் நிறைவேற்றப்படும் மரணதண்டனைகளின் எண்ணிக்கை அங்குள்ள அரசாங்கத்தால் ஊடகங்களில் கசிந்து விடாமல் இரகசியம் காக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் தூக்கிலிடப்பட்டு மரண தண்டனைக்கு விதிக்கப்பட்டாலும் இதுவரை அந்த எண்ணிக்கைகளை சீனா அரசாங்கம் வெளியிட்டதில்லை.
கடந்த மாதம் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுக்கு உள்ளான நான்கு கனேடிய பிரஜைகளை மனிதாபிமானமற்ற முறையில் தூக்கிலிட்டதை அடுத்து, சீனாவின் கம்யூனிஸ்ட் அரசாங்கம் சர்வதேச அளவில் கடுமையான கண்டனங்களை எதிர்கொண்டது.
தரவுகளை வெளியிடுவதில்லை
சீனாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பல மேற்கத்தியர்கள் போதைப்பொருள் குற்றங்களுக்காக மரண தண்டனை உட்பட கடுமையான தண்டனைகளை எதிர்கொள்கின்றனர்.
மனித உரிமைகள் அமைப்பு ஒன்று கடந்த ஆண்டு 1,518 மரணதண்டனைகளைப் பதிவு செய்துள்ளது, இது முந்தைய ஆண்டை விட 32 சதவீதம் அதிகமாகும். இதில் 64 சதவீதம் ஈரானில் பதிவாகியுள்ளது.
சீனா போன்றே, வடகொரியாவும் அதிக எண்ணிக்கையில் மரணதண்டனையை நிறைவேற்றினாலும், தரவுகளை வெளியிடுவதில்லை. வியட்நாம், சிரியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளும் வெளியிடப்படாத எண்ணிக்கையிலான மரணதண்டனைகளை நிறைவேற்றுகின்றன.
சவுதி அரேபியாவில் பெரும்பாலான மரணதண்டனைகள் இன்னும் வாளால் தலையை வெட்டியே நிறைவேற்றப்படுகின்றன. விபச்சாரம், ஓரினச்சேர்க்கை, கொலை, கற்பழிப்பு, ஆயுதமேந்திய கொள்ளை, கடத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்கு ஈரான் மற்றும் ஈராக்கில் மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
அமெரிக்காவில் 2024ல் மொத்தம் 25 பேர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |