மீண்டும் ஈரானில் பெண்களுக்கு ஹிஜாப் கட்டாயம்! வெடிக்குமா போராட்டம்?
ஈரானில் சாலையில் வரும் பெண்கள் கட்டாயம் ஹிஜாப் அணிய வேண்டும் என்று அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
மாஷா அமினி உயிரிழப்பு
ஈரானில் குர்திஸ்தானில் மாஷா அமினி (22) என்ற பெண் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஹிஜாப் அணியவில்லை என்று சிறப்பு படை பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவர் விசாரணையின் போது காவலர்களால் தலையில் தடியால் அடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதன் பிறகு அவர் ஒரு தடுப்பு மையத்திற்கு செல்லும் வழியில் சரிந்து விழுந்தார். இதனையடுத்து அவர், கடந்த மாதம் செப்டம்பர் 16 ஆம் திகதி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் ஈரானில் போராட்டமாக வெடித்தது. பெண்கள் தங்களுடைய ஹிஜாபை எரித்தும், முடியை வெட்டியும் போராட்டங்களை நடத்தினர்.
ஏப்ரல் மாதம், ஹிஜாப் அணியாததால் இரண்டு பெண்கள் மீது ஒரு ஆண் தயிர் சாதத்தை வீசினார். இதையடுத்து அந்த ஆணும், பெண்களும் கைது செய்யப்பட்டனர்.
You may have seen this video of a man in a corner shop in Iran pouring yoghurt over the heads of two women who weren't covering their hair.
— Kian Sharifi (@KianSharifi) April 1, 2023
The man has been arrested for "disturbing public order" & the two women have been detained for showing their hair.pic.twitter.com/GX89hL6dZo
ஈரானில் நடந்த போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஆனால், மாஷா அமினி உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாகவும், பொலிசார் தாக்கியதால் உயிரிழக்கவில்லை என்று ஈரான் அரசு அறிவித்திருந்தது.
மீண்டும் பெண்களுக்கு ஹிஜாப்
இந்நிலையில், சாலையில் வரும் பெண்கள் முறையாக ஹிஜாபை அணிய வேண்டும் என்று சிறப்பு படை பொலிசார் பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
இது தொடர்பாக உயர் அதிகாரி கூறுகையில்," ஆடை விதிகளை மீறும் பெண்களுக்கு முதலில் எச்சரிக்கை விடுக்கப்படும் என்றும், உத்தரவுகளை மறுத்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் கூறியுள்ளார்.
ஈரானில் பெண்களுக்கு விதித்த இந்த கட்டுப்பாடுகளால் மீண்டும் போராட்டம் வெடிக்குமா என்ற பரபரப்பு அங்கு எழுந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |