தேர்தலில் வாக்களிக்க வந்த பெண்ணின் ஹிஜாப்பை கழட்ட சொன்ன முகவரால் சலசலப்பு! வாக்குப்பதிவு நிறுத்தம்
மேலூரில் ஹிஜாப்பை அகற்ற சொல்லி பாஜக முகவர் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடந்து வருகிறது. இதையடுத்து பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மதுரை மேலூரில் வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாபை பாஜக முகவர் கழட்ட சொல்லியுள்ளார்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. வாக்குவாதம் செய்த அந்த முகவர் ஒருவழியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.
இதனால் சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. பின்னர் மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனிடையில் மதுரை மேலூரில் ஹிஜாப் அணிந்து வாக்களிக்க வந்தவருக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.