வேகமாக உருகும் இமயமலை பனிப்பாறைகள் - பேரழிவுகள் அதிகரிக்கும் அபாயம்
Himalayan glaciers melting accelerates: இமயமலை பனிப்பாறைகள் வேகமாக உருகிவருகிறது.
புதிய ஆய்வு எச்சரிக்கை
இமயமலைப் பனிப்பாறைகள் கடந்த பத்து ஆண்டுகளை விட 65 சதவீதம் வேகமாக உருகி வருகின்றன என்று புதிய ஆய்வு எச்சரிக்கிறது.
இதனால் பனிப்பாறை ஏரிகள், நிலச்சரிவு, திடீர் வெள்ளம் போன்ற பேரழிவுகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

தெற்கு ஆசியாவில் இருந்து வெளிப்படும் Black Carbon புகைத் துகள்கள், பனிப்பாறை உருக மூன்றில் ஒரு பங்கு காரணமாக உள்ளன. குறிப்பாக, செங்கல் அடுக்குகள் (brick kilns) மற்றும் தொழிற்சாலைகள் 32 முதல் 42 சதவீதம் வரை கார்பன் உமிழ்வை ஏற்படுத்துகின்றன.
இந்த துகள்கள் பனி மீது படிந்து, சூரிய வெப்பத்தை அதிகம் உறிஞ்சி, உருகலை வேகப்படுத்துகின்றன.
மிகுந்த ஆபத்தில் 56 ஏரிகள்
இந்த அறிக்கை இந்தியாவில் உள்ள 189 ஆபத்தான பனிப்பாறை ஏரிகளை ஆய்வு செய்து, 56 ஏரிகள் மிகுந்த ஆபத்தானவை என வகைப்படுத்தியுள்ளது.
இவை உடைந்து போனால், கிராமங்கள், சாலைகள், பாலங்கள், அடிப்படை வசதிகள் அனைத்தும் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்படலாம். மேலும், இமயமலைப் பகுதியில் சுமார் 40,000 பனிப்பாறைகள் உள்ளன.
ஆனால், 0.1 சதவீதம் மட்டுமே முறையாக கண்காணிக்கப்படுகின்றன. இதனால் எதிர்கால பேரழிவுகளை முன்கூட்டியே கணிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. இந்த மாற்றங்கள் மலைப்பகுதிகளை மட்டுமல்லாமல், தெற்காசியாவின் நீர்வளத்தையும் பாதிக்கின்றன.
2050-க்குள் பெரும்பாலான இமயமலை நதிகள் “peak water” நிலையை அடைந்து, பின்னர் நீர்வரத்து குறையும் அபாயம் உள்ளது. நூற்றாண்டின் இறுதிக்குள் பனிப்பாறைகளின் 80 சதவீதம் வரை இழக்கப்படும் அபாயம் உள்ளது.
இமயமலை சூழல் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 20 சதவீதத்திற்கும் மேல் ஆதரவு அளிக்கிறது. விவசாயம், உணவு உற்பத்தி, மின்சாரம், சுற்றுலா, வாழ்வாதாரம் அனைத்தும் இதனைச் சார்ந்துள்ளன.
கார்பன் உமிழ்வை குறைப்பது, பனிப்பாறைகளை கண்காணிப்பது, முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகளை வலுப்படுத்துவது, வன மேலாண்மை மற்றும் நிலையான சுற்றுலா திட்டங்களை உருவாக்குவது அவசியம் என இந்த ஆய்வறிக்கை வலியுறுத்துகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |