2 வயது குழந்தையை விழுங்கிய நீர்யானை! பின்னர் நடத்த ஆச்சரியம்
உகாண்டாவில் 2 வயது குழந்தையை நீர்யானை விழுங்கிய அதிர்ச்சியூட்டும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நீர்யானை விழுங்கி சிறுவன் உயிர்பிழைத்த அதிசயம்
உகாண்டாவில் நடந்த ஒரு அதிசய சம்பவத்தில், முரட்டு நீர்யானை விழுங்கி பின்னர் வெளியே கக்கிய 2 வயது சிறுவன் உயிர்பிழைத்துள்ளான்.
இகா பால் என அடையாளம் காணப்பட்ட 2 வயது சிறுவன், டிசம்பர் 4 அன்று கட்வே கபடோரோ நகரில் உள்ள ஒரு ஏரியின் கரையில் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தபோது பசியுடன் இருந்த நீர்யானை தனது பெரிய தாடைகளால் அவனைப் பிடித்தது.
Getty Images
நீர்யானை குழந்தியை முழுவதுமாக விழுங்கும் முன், அருகில் நின்ற கிறிஸ்பாஸ் பகோன்சா என்ற நபர், அதன் மீது பாறை கற்களை வீசத் தொடங்கினார். அதனால், நீர்யானை சில நொடிகளில் சிறுவனை வெளியே துப்பியது.
அந்த விலங்கு அவரை தலையில் இருந்து பிடித்ததாகவும், உடலின் பாதியை விழுங்கியதாக பொலிஸார் அறிக்கையில் தெரிவித்தனர்.
மேலும், சிறுவனின் கையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
பின்னர், அவர் முழுமையாக குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார், வெறிநாய்க்கடிக்கான தடுப்பூசியைப் பெற்ற பிறகு, அவர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
Dailymail
எச்சரிக்கை
இதையடுத்து, ஏரிகள் மற்றும் வனவிலங்கு மையங்கள் போன்ற விலங்குகள் சரணாலயங்களுக்கு அருகில் தங்கியிருக்கும் பெற்றோரை, முதலைகள் மற்றும் நீர்யானைகள் போன்ற தாக்கும் விலங்குகள் குறித்து அவதானமாக இருக்குமாறு காவல்துறை எச்சரித்துள்ளது.
நீர்யானைகள், தாவரவகைகளாக இருந்தாலும், அச்சுறுத்தப்படும்போது மிகவும் ஆக்ரோஷமாக இருக்கும் என எச்சரித்துள்ளனர்.