பல மில்லியனுக்கு விலைபோன ஹிட்லர் கைக்கடிகாரம்: யூத தலைவர்கள் கடும் கண்டனம்!
ஜெர்மனியின் நாஜி தலைவரான அடால்ஃப் ஹிட்லரின் கைக்கடிகாரம் சுமார் 1.1 மில்லியனுக்கு அமெரிக்காவில் விற்பனையாகியுள்ளது.
இரண்டாம் உலகப் போரில் 1933ம் ஆண்டு முதல் 1945 வரையிலான காலக்கட்டங்களில் ஜெர்மனியை வழிநடத்தி சுமார் 11 மில்லியன் மக்களை நாஜி தலைவரான அடால்ஃப் ஹிட்லர் கொன்று குவித்தார்.
இதன்மூலம் உலகின் மிக கொடூரமான சர்வாதிகாரிகளில் ஒருவராக கருதப்படும் உலக தலைவர்களில் ஹிட்லர் மிக முக்கிய இடத்தினை பெற்றுள்ளார்.
இந்தநிலையில் அமெரிக்காவின் மேரிலாந்தில் உள்ள அலெக்சாண்டர் வரலாற்று ஏலத்தில் அடால்ஃப் ஹிட்லரின் கைக்கடிகாரம் சுமார் 1.1 மில்லியனுக்கு விற்பனையாகியுள்ளது.
இந்த தங்க ஆண்ட்ரியாஸ் ஹூபர் ரிவர்சிபிள் கைக்கடிகாரம் ஹிட்லரின் 44-வது பிறந்தநாளுக்கான பரிசாக ஏப்ரல் 20, 1933 அன்று வழங்கப்பட்டுள்ளது.
மேலும் மே, 1945 இல் ஹிட்லர் பெர்கோஃப் மலையில் பின்வாங்கிய போது சுமார் 30 பிரெஞ்சு வீரர்கள் தாக்கப்பட்டு அந்த கடிகாரம் ஒரு நினைவுப் பொருளாக எடுக்கப்பட்டதாக ஏல இல்லத்தின் மதிப்பீடு கூறுகிறது.
அடையாளம் தெரியாத ஏலதாரருக்கு விற்கப்பட்ட ஹூபர் டைம்பீஸ், ஸ்வஸ்திகா சின்னத்தை காட்டுவதுடன் அதில் AH இன் முதலெழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடதக்கது.
இந்தநிலையில், ஜெர்மனியின் நாஜி தலைவரான அடால்ஃப் ஹிட்லரின் கைக்கடிகாரம் சுமார் 1.1 மில்லியனுக்கு விற்கப்பட்டத்தை யூத தலைவர்கள் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கூடுதல் செயுதிகளுக்கு: டிக்-டாக் பதிவிட்ட முன்னாள் மனைவியை...14000 கிமீ பயணம் செய்து கொலை செய்த கணவர்!
ஏலத்தில் விடப்படும் 'ஹிட்லரின் கைக்கடிகாரம்', ரூ.144 கோடிக்கு விற்கப்படலாம் என கணிப்பு
ஏல நிறுவனத்திற்கு சுமார் 34 யூத தலைவர்கள் அனுப்பியுள்ள வெளிப்படை கடிதத்தில் ஹிட்லரின் கைக்கடிகாரத்தை விற்பனை செய்தது வெறுக்கதக்கது என்றும், அதனை உடனடியாக ஏலத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது.