பிரித்தானியாவை ‘மிகவும் ஆபத்தான’ பகுதியாக அறிவித்தது ஹாங்காங்.. அனைத்து பயணிகள் விமாங்களுக்கும் தடை!
பிரித்தானியாவிலிருந்து வரும் அனைத்து பயணிகள் விமானங்களுக்கும் தடை விதிப்பதாக சீனாவின் சிறப்பு நிர்வாக பிராந்தியமான ஹாங்காங் அறிவித்துள்ளது.
பிராந்தியத்தில் டெல்டா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கத்தோடு இந்நடவடிக்கை எடுத்துள்ளதாக ஹாங்காங் அரசு குறிப்பிட்டுள்ளது.
ஜூலை 1ம் திகதி முதல் பிரித்தானியாவிலிருந்து வரும் அனைத்து பயணிகள் விமானங்களும் ஹாங்காங்கில் தரையிறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவை மிகவும் ஆபத்தான பகுதியாக ஹாங்காங் அரசாங்கம் அறிவித்துள்ளது.
2 மணி நேரத்திற்கு மேலாக பிரித்தானியாவில் தங்கிய நபர்கள் ஹாங்காங்கிற்கு செல்லும் பயணிகள் விமாங்களில் ஏறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், டெல்டா மாறுபாடு பரவலை தடுக்க பிரித்தானியாவிலிருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கட்டாய தனிமைப்படுத்தலை அமுல்படுத்த வேண்டும் என ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் அழைப்பு விடுத்தார்.
ஏஞ்சலா மெர்க்கலின் அழைப்புக்கு ஆதரவாக பிரான்ஸ் ஜனாதிபதி மாக்ரோன் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆனால், பிரித்தானியா பயணிகளுக்கு தனிமைப்படுத்தலை விதிப்பது குறித்து ஒவ்வொரு நாடும் தனிப்பட்ட முறையில் தீர்மானிப்பது தான் நியாயமானது என பிரித்தானியா தெரிவித்துள்ளது.