வேகமெடுக்கும் African Swine Flu., 900 பன்றிகளை அழிக்க உத்தரவிட்டுள்ள நாடு
ஹொங்ஹொங்கில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் (African Swine Fever) வேகமாகப் பரவி வருகிறது. இதனால் கால்நடை வளர்ப்போர் கவலையடைந்துள்ளனர்.
இதற்கிடையில், பன்றிக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்க ஹாங்காங் கால்நடை மருத்துவர்கள் குழு 900-க்கும் மேற்பட்ட பன்றிகளை கொள்ள உத்தரவிட்டது.
New Territories மாவட்டத்தில் உரிமம் பெற்ற பண்ணையில் உள்ள விலங்குகளில் இந்த கொடிய நோய் கண்டறியப்பட்டதை அடுத்து அதிகாரிகள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
30 பன்றிகளை பரிசோதித்ததில் 19 பன்றிகளுக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டதாக வேளாண்மை, மீன்வளம் மற்றும் பாதுகாப்புத் துறை (AFCD) தெரிவித்துள்ளது.
இதையடுத்து, 900க்கும் மேற்பட்ட பன்றிகளை கொல்ல கால்நடை மருத்துவர்கள் உத்தரவிட்டனர்.
Artist’s concept
ராய்ட்டர்ஸ் அறிக்கையின்படி, அடுத்த வார தொடக்கத்தில் பன்றிகள் கொல்லப்படும். இது தவிர, 3 கிலோமீட்டருக்குள் உள்ள மேலும் எட்டு பன்றிப் பண்ணைகளை ஆய்வு செய்யவும், சோதனைக்காக மாதிரிகளை சேகரிக்கவும் AFCD அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சமைத்த இறைச்சி பாதுகாப்பானது
பன்றிகளில் பரவி வரும் வதந்திகளுக்கு இடையில், மக்கள் கவலைப்பட தேவையில்லை என்றும், முழுமையாக சமைத்த பன்றி இறைச்சி உண்பதற்கு பாதுகாப்பானது என கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பல ஆண்டுகளாக, தடுப்பூசி அல்லது பயனுள்ள சிகிச்சை இல்லாததால், நோயைக் கட்டுப்படுத்துவது மிகவும் சவாலானது என்று விலங்கு ஆரோக்கியத்திற்கான உலக அமைப்பு தெரிவித்துள்ளது.
Reuters
பன்றிகளுக்கு ஆபத்தானது மற்றும் தடுப்பூசி இல்லை என்றாலும், ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் (ASF) மனிதர்களை பாதிக்காது என்று ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு கூறியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Hong Kong to cull 900 pigs African swine fever outbreak, Hong Kong African swine fever