நிலநடுக்கம், சுனாமியை அடுத்து ஜப்பானில் கோர சம்பவம்: நெருப்பு கோளமான பயணிகள் விமானம்
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள Haneda விமான நிலையத்தில் பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கிய நிலையில், சிறிய கடலோர பாதுகாப்பு விமானம் ஒன்றுடன் மோதி நெருப்பு கோளமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விமானம் நெருப்பு கோளமாக
தொடர்புடைய கடலோர பாதுகாப்பு விமானமானது நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நோட்டோ தீபகற்பத்திற்கு உதவிகளை எடுத்துச் செல்லும் பொருட்டு காத்திருந்துள்ளது. இந்த நிலையிலேயே ஜப்பான் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் தரையிறங்கியுள்ளது.
@getty
இதில் இரண்டு விமானங்களும் மோதிக்கொள்ள, ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் நெருப்பு கோளமாக மாறியது. கடலோர பாதுகாப்பு விமானத்தின் ஐந்து ஊழியர்கள் இந்த விபத்தில் சிக்கி பலியாகியுள்ளதாகவும் பயணிகள் விமானத்தில் இருந்து 8 சிறார்கள் உட்பட 379 பேர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
விமானம் மொத்தம் தீக்கிரையாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, வெளியேற்றப்பட்ட பயணிகளில் 17 பேர்கள் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கடலோர பாதுகாப்பு விமானத்தின் விமானி அதிர்ஷ்டவசமாக தப்பியதாகவும், எஞ்சிய ஐவரும் மரணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
@epa
கடலோர காவல்படை விமானம்
உள்ளூர் நேரப்படி மதியத்திற்கு மேல் சுமார் 5.47 மணிக்கு Haneda விமான நிலையத்தில் இந்த கோர சம்பவம் நடந்துள்ளது. இந்த நிலையில், விபத்துக்குள்ளான இரண்டு விமானங்களும் ஒரே ஓடுபாதையில் ஏன் இருந்தன என்பதை நிலம், உள்கட்டமைப்பு, போக்குவரத்து மற்றும் சுற்றுலா அமைச்சகம் மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் உள்ளிட்டவை விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
@ap
புத்தாண்டு தினத்தில் குறைந்தது 48 பேரை பலிவாங்கிய பூகம்பத்திற்குப் பிறகு ஜப்பானின் மேற்கு கடற்கரையில் உள்ள நிகாடா விமான நிலையத்திற்கு பொருட்களை வழங்க கடலோர காவல்படை விமானம் தயாராகிக்கொண்டிருந்தது. இந்த நிலையிலேயே பயணிகள் விமானம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |