கதறிய பெற்றோர்... கண்ணிமைக்கும் நேரத்தில் சிறுவனுக்கு நடந்த கொடூரம்
கோஸ்டா ரிகா நாட்டில் ஆற்றில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை முதலை ஒன்று பெற்றோர் கண் முன்னே கவ்வி இழுத்துச் சென்று கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோஸ்டா ரிகாவின் லிமோன் பகுதியிலேயே குறித்த பகீர் சம்பவம் அரங்கேறியுள்ளது. 8 வயதான Julio Otero முட்டளவு தண்ணீரில் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போதே குறித்த சிறுவனை முதலை ஒன்று திடீரென்று தாக்கியுள்ளது.
மகனின் நினைவாகவே உள்ளது
முதலை தங்கள் மகனை கவ்வி இழுத்துச் செல்வதை கதறியபடியே பெற்றோர் பார்த்து நின்றுள்ளனர். சிறுவனின் தாயார் மார்கினி தெரிவிக்கையில், குடியிருப்பில் தங்களால் நிம்மதியாக இருக்க முடியவில்லை, எப்போதும் மகனின் நினைவாகவே உள்ளது என்றார்.
Picture: Jam Press
இனிமேலும், இந்த குடியிருப்பில் தங்கினால், தங்கள் பிள்ளையின் நினைவால் சாவும் நிலைக்கு தள்ளப்படுவோம், வேறு பகுதிக்கு குடியேறுவதே நல்லது என நம்புகிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.
சிறுவனின் சடலமானது மீட்கப்படவில்லை
இந்த நிலையில் எஞ்சிய நான்கு பிள்ளைகளுடன் நிகரகுவா செல்லவும் அந்த தம்பதி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, முதலை கவ்வி இழுத்துச் சென்ற சிறுவனின் சடலமானது இதுவரை மீட்கப்படவில்லை என்றே தெரிய வந்துள்ளது.
Picture: Jam Press
மேலும், அப்பகுதியில் கடுமையான மழைபெய்து வருவதால் தேடுதல் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், எந்த முதலை சிறுவனை கவ்விச் சென்றுள்ளது என்பதை அடையாளம் காண்பதும் சிரமமான விடயம் என கூறுகின்றனர்.