பிணைக்கைதிகள் விடுவிப்பு நாளை துவக்கம்: இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் தகவல்
ஹமாஸ் அமைப்பால் பிடித்துச் செல்லப்பட்டுள்ள பிணைக்கைதிகளை விடுவிப்பது தொடர்பில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று செய்துகொள்ளப்பட்டுள்ளது.
ஹமாஸ் அமைப்பால் பிடித்துச் செல்லப்பட்ட மக்கள்
அக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது திடீர்த்தாக்குதல் நடத்தி, நூற்றுக்கணக்கானோரை கொன்றதுடன், பலரை பிணைக்கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர் ஹமாஸ் ஆயுதக்குழுவினர்.
அவர்களை மீட்க கத்தார் முதலான சில நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டுவருகின்றன. அவ்வகையில், சில பிணைக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் குழுவினர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
The Guardian
பிணைக்கைதிகள் சிலரை ஹமாஸ் விடுவிப்பது என்றும், அதற்கு பதிலாக, இஸ்ரேல் நான்கு நாட்கள் போர் நிறுத்தம் செய்வது என்றும் இன்று காலை ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டுள்ளது.
பிணைக்கைதிகள் விடுவிப்பு நாளை துவக்கம்
இந்நிலையில், காசாவிலிருந்து பிணைக்கைதிகளை மீட்கும் நடவடிக்கைகள் நாளை துவங்கும் என எதிர்பார்ப்பதாக இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சரான Eli Cohen தெரிவித்துள்ளார்.
50 பிணைக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் சம்மதித்துள்ள நிலையில், முதல்தவணையாக, நாளை சில பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட உள்ளதாக அமைச்சர் Eli Cohen தெரிவித்தார்.
India Today
ஆனால், நாளை எத்தனை பேர் விடுவிக்கப்படுவார்கள் என்பதை அவர் தெரிவிக்கவில்லை, அத்துடன், நாளை காலை 5.00 மணியளவில் பிணைக்கைதிகள் மீட்பு நடவடிக்கைகள் துவங்கும் என ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியை உறுதி செய்யவும் அவர் மறுத்துவிட்டார்.
50 பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்கும் நிலையில், அதற்கு பதில், இஸ்ரேல் சிறைகளிலிருக்கும், 150 பாலஸ்தீன பெண்கள் மற்றும், 19 வயதுக்கு கீழுள்ளவர்களை இஸ்ரேல் விடுவிக்க சம்மதம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Al Jazeera
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |