வாக்குறுதியை காப்பாற்றிய ஹமாஸ் படைகள்... புதிய எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல் ராணுவம்
பணயக்கைதிகளை விடுவிக்கும் பொருட்டு முன்னெடுக்கப்பட்ட போர் நிறுத்த நடவடிக்கையின் ஒருபகுதியாக ஹமாஸ் படைகள் வாக்குறுதியை காப்பாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹமாஸ் படைகள் வாக்குறுதி
இஸ்ரேல் - ஹமாஸ் படைகள் இடையே 4 நாட்கள் போர் நிறுத்தமானது உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை பகல் 7 மணிக்கு துவங்கியது. இந்த நிலையில் ஹமாஸ் படைகள் வாக்குறுதி அளித்தது போன்று 25 பணயக்கைதிகளை விடுவித்துள்ளனர்.
@reuters
இதில் 12 தாய்லாந்து நாட்டவர்களும் 13 இஸ்ரேல் நாட்டவர்களும் என தகவல் வெளியாகியுள்ளது. பதிலுக்கு இஸ்ரேல் சிறையில் வாடும் 39 பாலஸ்தீன மக்கள் விடுவிக்கப்படுவார்கள்.
சுமார் 2 மாதங்களுக்கு பின்னர் ஹமாஸ் பிடியில் இருந்து 25 பேர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளது தொடர்பில் தாய்லாந்து நிர்வாகம் உறுதி செய்துள்ளது.
தூதரக அதிகாரிகள் இன்னும் சில மணி நேரத்தில் அவர்களை அழைத்துச் செல்ல உள்ளனர் என்றும், அவர்களின் பெயர் மற்றும் விவரங்கள் விரைவில் தெரியவரும் என்றும் தாய்லாந்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.
@reuters
இதனிடையே, பணயக்கைதிகள் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டு, ரஃபா எல்லைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சில இஸ்ரேலிய பணயக்கைதிகள் இஸ்ரேலுக்குத் திரும்புவதற்காக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் சிறையில் வாடும்
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை முதல் 39 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் அவர்களின் சிறைகளில் இருந்து விடுவிக்க உள்ளது, அவர்களில் 24 பெண்கள் மற்றும் 15 இளைஞர்கள் என கூறப்படுகிறது.
@reuters
இந்த 4 நாட்கள் போர் நிறுத்த நடவடிக்கையின் போது மொத்தமாக 50 பணயக்கைதிகளும் இஸ்ரேல் சிறையில் வாடும் 150 பாலஸ்தீன மக்களும் விடுவிக்கப்பட உள்ளனர்.
இதனிடையே, ஹமாஸ் படைகள் தங்கள் வசமிருக்கும் பணயக்கைதிகளை ஒரு நாளைக்கு குறைந்தது 10 பேர் வீதம் விடுவித்தால் போர் நிறுத்தம் நீட்டிக்கப்படலாம் என்று இஸ்ரேல் கூறியுள்ளது.
பாலஸ்தீன தரப்பில், 100 பணயக்கைதிகள் வரையில் விடுவிக்கப்பட வாய்ப்பிருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், போர் இன்னும் முடிவடையவில்லை என இஸ்ரேல் ராணுவம் மிரட்டல் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
@reuters
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |