ஹாட் ஏர் பலூனில் திடீரென பரவிய தீ: நடுவானில் இருந்து குதித்த பயணிகள்:வீடியோ
மெக்சிகோவில் வானில் பறந்து கொண்டிருந்த ஹாட் ஏர் பலூனில் தீப்பிடித்ததை தொடர்ந்து அதிலிருந்த இரண்டு பயணிகள் கீழே குதித்தனர்.
நடுவானில் தீ பிடித்த பலூன்
மெக்சிகோ நகருக்கு அருகில் உள்ள தியோதிஹூகான்(Teotihuacan) தொல்பொருள் தளத்திற்கு மேலே பறந்து கொண்டிருந்த ஹாட் ஏர் பலூனில் திடீரென தீ பிடித்து விபத்து ஏற்பட்டது.
விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து உயிரை காப்பாற்றி கொள்ள பயணிகள் பலூனில் இருந்து குதித்தனர் என மெக்சிகோ அரசு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Mexico ??
— Lenar (@Lerpc75) April 1, 2023
! Breaking news!??
Saturday, April 01, 2023, in the morning hours.
a hot air balloon catches fire and collapses in Teotihuacan, 2 people are reportedly dead.
The events occurred this morning in the vicinity of the Pyramid of the Sun and the area was cordoned off. pic.twitter.com/DlzJdv2oHH
மேலும் இதில் 39 வயதுடைய பெண், 50 வயதுடைய ஆண் என இரண்டு பேர் வரை உயிரிழந்து இருப்பதாகவும், குழந்தை ஒன்று தீ காயங்களால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் விபத்து ஏற்பட்ட போது ஹாட் ஏர் பலூனில் எத்தனை பயணிகள் இருந்தனர் என்ற தகவல் தெரியவரவில்லை.
இணையத்தில் பகிரப்பட்ட வீடியோ
இந்த சம்பவம் தொடர்பாக இணையத்தில் பகிரப்பட்ட வீடியோவில், தெளிவான வானில் பலூனின் கோண்டோலா தீப்பிடித்து எரிவதை பார்க்க முடிகிறது.
iStock
சில சுற்றுலா வழிகாட்டிகள் மெக்சிகோ நகரிலிருந்து வடகிழக்கே 45 மைல்கள் தொலைவில் உள்ள தியோதிஹுவாகன் மீது பலூன்களில் பறப்பதற்கு சுமார் $150 கட்டணமாக வசூலிக்கின்றனர்.