பிரேசிலில் வெப்ப பலூன் வெடிப்பு விபத்து: 8 பேர் வரை உயிரிழந்த சோகம்!
பிரேசிலின் தெற்கு மாகாணமான சாண்டா கேடரினாவில் நடந்த துயரமான வெப்ப பலூன் விபத்தில் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற இந்த பலூன், பிரை குராண்டே நகரில் சனிக்கிழமை அதிகாலை தீப்பிடித்து வானத்தில் இருந்து கீழே விழுந்துள்ளது.

உள்ளூர் செய்தி நிறுவனமான G1 வெளியிட்ட காட்சிகளில், பலூன் வேகமாக கீழே இறங்கும் போது அதிலிருந்து புகை வெளியேறுவது பதிவாகியுள்ளது.
சாண்டா கேடரினா இராணுவ தீயணைப்புப் படை வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த விபத்தில் பதின்மூன்று பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

அவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மொத்தம் 21 பேர், விமானி உட்பட, இந்த பலூனில் பயணம் செய்துள்ளனர்.
மாகாண ஆளுநர் ஜோர்ஜின்ஹோ மெல்லோ, X தளத்தில் வெளியிட்ட வீடியோவில் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |