உலகின் பணக்கார குடும்பம் இதுதான்; மொத்தம் 15,000 உறுப்பினர்கள்
உலகின் பணக்காரர் யார் என கேட்டால், எலான் மஸ்க் என எளிதாக சொல்லி விடுவார்கள். 393.1 பில்லியன் டொலர் சொத்துகளுடன் எலான் மஸ்க் உலகப்பணக்காரர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
அதுவே உலகின் பணக்கார குடும்பம் யார் என கேட்டால், பெரும்பாலும் பிரித்தானிய அரச குடும்பத்தை தான் சொல்வார்கள்.
சவுதி அரேபியா அரச குடும்பம்
ஆனால், உலக பணக்கார குடும்பம் என்பது சவுதி அரேபியாவின் அரச குடும்பம்(House of Saud) ஆகும்.
இந்த குடும்பத்தின் சொத்து மதிப்பு, 1.4 ட்ரில்லியன் டொலர் என கூறப்படுகிறது. மேலும், இந்த குடும்பத்தில் மொத்தம் 15,000 உறுப்பினர்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
பாலைவன நாடான சவுதி அரேபியாவில் உள்ள பெட்ரோல் வளத்தை முறையாக பயன்படுத்தி, சவுதி அரச குடும்பம் இந்த நாட்டை வளப்படுத்தியதாக கூறப்படுகிறது.
1744 ஆம் ஆண்டு முதல் சவுத் (Saud) என்னும் பெயர் கொண்ட வம்சத்தினர் அங்கு ஆட்சி செய்து வருகின்றனர்.
சவுதி அரேபியாவின் முதல் அரசர் அப்துல்லா பின் அப்துல் அசீசு ஆவார். இவருக்கு மட்டும் 17 மனைவிகள் வழியாக 36 குழந்தைகள் உண்டு.
இவருக்கு அடுத்து மன்னரான, இவரது மகன் கிங் சாத்துக்கு(சவுதி அரேபியாவின் 2வது மன்னர்) மட்டும் 53 குழந்தைகள் ஆவார். இப்படியாக இவரது குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை பெருகியுள்ளது.
2015 ஆம் ஆண்டு முதல் சல்மான் மன்னராக இருக்கிறார். இவர் முந்தைய மன்னர் அப்துல்லாசிஸின் 25 வது குழந்தை ஆவார். பட்டத்து இளவரசராக சல்மானின் 7வது மகன் முகமது பின் சல்மான் உள்ளார்.
ஆடம்பர வாழ்க்கை
உலகின் பெரும் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான சவூதி அரம்கோ நிறுவனம் மன்னர் குடும்பத்திற்கு சொந்தமானதாகும். அரம்கோவின் லாபம் முழுவதும் அரச குடும்பத்தின் செலவுக்கே ஒதுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த குடும்பத்தில் இருக்கும் பெரும் பணக்காரராக அல்வலீத் பின் தலால் அல் சவுத் (Alwaleed bin Talal Al Saud) கருதப்படுகிறார். இவரது சொத்து மதிப்பு 20 பில்லியன் டொலர்கள் ஆகும்.
பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், 500 மில்லியன் டொலர் மதிப்புள்ள, 440 அடி நீளமுள்ள செரீன் என்ற படகு வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் நீச்சல் குளங்கள் முதல் ஹெலிபேட் வரை உள்ளது.
மேலும், தனிப்பயனாக்கப்பட்ட போயிங் 747-400 விமானம் வைத்துள்ளார். 2017 ஆம் ஆண்டு, லியோனார்டோ டா வின்சி ஓவியத்தை $450 மில்லியன் டொலருக்கு வாங்கினார்.
மேலும், பல ஆடம்பர அரண்மனைகள் வைத்துள்ளனர். தங்க மூலம் பூசப்பட்ட லம்போர்கினி உட்பட 22 மில்லியன் டொலர் மதிப்புள்ள கார்கள் உள்ளது.
செலவுகள்
மன்னரின் நேரடி மகனுக்கு 2.70 லட்சம் டொலர்களும், பேரக்குழந்தைகளுக்கு 8 ஆயிரம் டொலர்களும் மாத செலவுக்காக வழங்கப்படும்.
அரச வாரிசுகளுக்குத் திருமணம் நடந்தால், அரண்மனைக் கட்டிக் கொள்ள 3 மில்லியன் டொலர்கள் வரை திருமணப் பரிசாக வழங்கப்படும் என 15 ஆண்டுகளுக்கு முன்னர் விக்கிலீக்ஸ் தெரிவித்திருந்தது.
அரச குடும்ப வாரிசுகளுக்கு, அரசு துறைகளில் நிர்வாக ரீதியிலான பதவிகள் வழங்கப்படும். எண்ணெய் நிறுவனங்களில் கௌரவத் தலைவர்கள் பதவியில் இருப்பார்கள். அதில் இருந்து படிகள் கிடைக்கும். மற்றபடி சவுதி ஏர்லைன்சில் நினைத்த நேரம் பயணம் செய்யும் வசதி உண்டு.
சவுதி அரேபியாவின் மொத்த பட்ஜெட்டான 40 பில்லியன் டொலர்களில், 2 பில்லியன்டொலர்கள் அரசக் குடும்பத்தின் செலவுகளுக்காக ஒதுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
அதேவேளையில், "ஆண்டுக்கு 2.7 பில்லியன் டொலர்கள் மன்னர் குடும்பத்துக்கு மட்டுமே செலவாகிறது என கூறுவது தவறானது. நாட்டின் பல மாகாணங்களில் பூர்வக் குடிகள் உள்ளனர். அந்த பூர்வக்குடித் தலைவர்களுக்கு பெரும் தொகை போய் சேர்கிறது'' என சவுதி அரச குடும்ப செய்தித் தொடர்பாளர் குவாசேயர் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |