இமாச்சல பிரதேசத்தில் வெள்ளத்தால் அடித்துச் செல்லும் வீடுகள்! பதற வைக்கும் வீடியோ
இமாச்சல பிரதேசம், மண்டி மாவட்டத்தில் உள்ள பீஸ் நதியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக வீடுகள் மற்றும் பாலங்கள் அடித்துச் செல்லப்படும் வீடியோ காட்சிகள் வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளன.
இமாச்சலில் கடும் வெள்ளப்பெருக்கு
வட மாநிலங்களான, டெல்லி, இமாச்சல பிரதேசம், மாஹாரஷ்டிரா, உத்திர பிரதேசம், காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
கடந்த 6 நாள்களாக பெய்த கனமழையால் பல இடங்களில் நீர்நிலை மட்டம் உயர்ந்துள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனால், அங்குள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அடித்துச் செல்லப்படும் வீடுகள், பாலம்
இமாச்சல பிரதேசத்தில் உள்ள சிம்லா, குலு, மண்டி பகுதிகளில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் , 9 இடங்களில் உள்ள வாகனங்கள், வீடுகள், பொருள்கள் ஆகியவை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
हिमाचल प्रदेश के चंबा में भारी बारिश से रावी नदी उफान पर#HimanchalPradesh #manali #HimachalFloods #himachalflood #chamba pic.twitter.com/jJJgbLsoLB
— ANURAAG ॐ SHARMA ?? (@7ANURAGSHARMA) July 10, 2023
அதுமட்டுமல்லாமல், பீஸ் நதியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஆத் பஞ்சரை இணைக்கும் பாலமும் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
மழையால் 5 பேர் உயிரிழப்பு
வெள்ளப்பெருக்கு அதிகமானதால் பல கிராமங்கள் மூழ்கியுள்ளன. பல கிராமத்தில் உள்ள மக்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும், போக்குவரத்து அதிக இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளது.
சிம்லா பகுதியில் பெய்த மழையால் வீடு இடிந்ததால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சம்பா பகுதியில் நிலச்சரிவில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
இமாச்சல பிரதேசத்தில் பல மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், அங்குள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
#हिमाचल_प्रदेश में भारी बारिश के कारण आपदा की स्थिति है, जान माल व घरों को भारी नुकसान पहुंच रहा है।
— Ashok Tanwar (@Tanwar_Indian) July 10, 2023
हिमाचल प्रदेश व देश के अन्य बारिश प्रभावित क्षेत्रों में स्थिति सामान्य होने के लिए ईश्वर से प्रार्थना करता हूँ।#Rain#HimanchalPradesh#HimachalFloods #Heavyrainfall… pic.twitter.com/E2rnORnlDV
மேலும், 17க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டது மட்டுமல்லாமல் பல ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட மழையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |