ஏமனில் பெரிம் தீவை கைப்பற்றிய ஹவுதிகள் - உலகளாவிய எண்ணெய் போக்குவரத்துக்கு அச்சுறுத்தல்
Houthis capture Perim island: ஏமனில் பெரிம் தீவை ஹவுதிகள் கைப்பற்றியுள்ளனர்.
பெரிம் தீவை கைப்பற்றிய ஹவுதிகள்
ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி இயக்கம், ஏமனின் மேற்குக் கடற்கரை பகுதியில் முக்கிய முன்னேற்றம் கண்டுள்ளது. அவர்கள் பாப் அல்-மந்தப் நீரிணையின் நடுப்பகுதியில் அமைந்துள்ள பெரிம் (Mayyun) தீவை கைப்பற்றியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கப்பட வாய்ப்பு
இந்த தீவு, செங்கடல் மற்றும் சூயஸ் கால்வாய் வழியாக ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் முக்கியமான வர்த்தக பாதையில் அமைந்துள்ளது. உலகளாவிய பொருட்களின் சுமார் 12 சதவீதம் இந்த நீரிணை வழியாக வர்த்தகம் செய்யப்படுகிறது.
சவுதி அரேபியா, ஏமன் அரசுப் படைகளுக்கு ஆதரவளித்து வந்த நிலையில், ஹவுதிகள் மோகா துறைமுக நகரத்தையும் கைப்பற்றியுள்ளனர். இதனால், சவுதி அரேபியாவின் எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கப்பட வாய்ப்பு அதிகரித்துள்ளது.

ஏற்கனவே, ஹார்முஸ் நீரிணையில் ஈரான் தாக்குதல்களை நடத்தியதால், சவுதி அதிகமாக செங்கடல் பாதையை பயன்படுத்தி வந்தது. ஹவுதிகள் பெரிம் தீவை கைப்பற்றியதால், உலகளாவிய எரிசக்தி போக்குவரத்துக்கு இரட்டை அச்சுறுத்தல் உருவாகியுள்ளது.
ஈரான் வரவேற்பு
ஹார்முஸ் நீரிணை ஈரான் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், பாப் அல்-மந்தப் ஹவுதிகள் கட்டுப்பாட்டிற்கு சென்றுள்ளது. இதனால், எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டொலரை தாண்டியுள்ளது.
ஈரான், ஹவுதிகளின் முன்னேற்றத்தை வரவேற்று, “இது சவுதி மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான எங்கள் கூட்டணியை வலுப்படுத்தும்” என அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
மிகப்பெரிய சந்தையாக உருவெடுக்கும் சொகுசு பதுங்குகுழிகள் - 2035-க்குள் 10 பில்லியன் டொலர் மதிப்பை எட்டும்
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |